உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்?

டில்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவாகும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அ.தி.மு.க., மூத்த தலைவர் செங்கோட்டையன், டில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,க்கும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு எழுந்ததாக தகவல் வெளியானது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காத செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு, பிரச்னை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cit2blin&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக அ.தி.மு.க., - பா.ஜ., இடையே மீண்டும் கூட்டணி உருவாகக்கூடும் என தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி சென்ற இ.பி.எஸ்., மத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என தகவல்கள் வந்தன. ஆனால், தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக மட்டும் இ.பி.எஸ்., விளக்கம் அளித்தார்.இதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் டில்லி சென்று அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக ரகசியமாக டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக செங்கோட்டையன் தரப்பிலோ, மத்திய அமைச்சர்கள் தரப்பிலோ, எந்தவிதமான அறிவிப்போ, படமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தாமரை மலர்கிறது
மார் 30, 2025 00:19

எடப்பாடியை தூக்கிவிட்டு, அதிமுக தலைவராக செங்கோட்டையனை நியமிக்க அமித் ஷா விரும்புகிறார். விரைவில் அது நிறைவேறும்.


V pravin
மார் 29, 2025 23:30

உங்களுக்கு ஏன் இந்த வேலை நீ .மிக விரைவில் ஓபிஎஸ் போன்று செல்லாக்காசாக போகிறீர். அன்பு அதிமுக தொண்டர்களே இந்த சகுனியிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.


சிட்டுக்குருவி
மார் 29, 2025 19:53

ஜெயலலிதா ஒரு மிக திறமை ,ஆளுமை வாய்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். தனித்துவமாக செயல்படக்கூடியவர். அவர் தனித்தே இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்க்கு இவளவு பேரிழப்பு ஏற்பாட்டிருக்காது .ஆனல் கூடா நட்பு அவரை மீளா துயரத்தில் தள்ளி அவரின் உயிரையே மாய்த்துவிட்டது.அவரை உபயோகப்படுத்தி சொத்து சேர்த்தவர்கள் இன்று உல்லாசமாக உலா வருகிறார்கள். சாந்தப்பம் கிடைத்தால் நாட்டையே அடிமையாக்கி சிற்றரசர்களாக உலா வர துடிதுடித்துக்கொண்டிருக்கின்றார்கள் .மக்களுக்கு இப்போது மிகவும் தெளிவு வந்துவிட்டது .இனிமேல் ஏமாறமாட்டார்கள் .


Ray
மார் 29, 2025 20:40

ஜெயலலிதா ஒரு மிக திறமை ,ஆளுமை வாய்ந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். தனித்துவமாக செயல்படக்கூடியவர். அவர் தனித்தே இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்க்கு இவளவு பேரிழப்பு ஏற்பாட்டிருக்காது When devil purports any evil against man, first perverts his mind. நல்லது நடந்தால் நான் சாதித்தேன். தோற்றால் யார் மீதாவது பழிபோட்டு தப்பிக்க வேண்டும். உன் புத்தி எங்கே போனது? இன்றும் சிலர் ஆடுகிறார்கள் ஆட்டுவிக்கிறார்கள் முடிவு?


Ramesh Sargam
மார் 29, 2025 19:28

டெல்லியில் கூட யார் அந்த சார் –ஆ?


S.L.Narasimman
மார் 29, 2025 18:34

ஓவர் பில்டப் வேலைக்கு ஆகாது செங்கோடா.


K.SANTHANAM
மார் 29, 2025 18:30

தற்போதைய சூழ்நிலைக்கு தொண்டர்கள் சுலபமாக சந்திக்க கூடிய செங்கோட்டையன் பொதுச்செயலராக வரவேண்டிய நேரம் இது.


M R Radha
மார் 29, 2025 18:05

பொதுவாவே ஈபிஸ்க்கு தல கனம் அதிகம். தன்னை எம்ஜியார் ஜெயாவுக்கு மேலே என்று நினைத்து கொள்வார். ஜெயா தனக்குப்பின் ஓபிஎஸ் தான் தேர்ந்தெடுத்தார். இவரை முன்னிலைப்படுத்தியது சசிகலா. இவர் யாருக்குமே விசுவாசமாக இருந்ததில்லை. இவரை டம்மியாக்கி தினகரனை முன்னிலைப்படுத்தினால் கட்சி தழைக்கும். இல்லையெனில் டமார் தான். கட்சி கஜானாவில் பணமிருக்கும் வரை ஆட்டம் போடுவார்.


Venkateswaran Rajaram
மார் 29, 2025 18:04

இவருக்கு தெரிஞ்ச ஒரே மொழி தமிழ் தான் ...அதுவும் ஒரு வரிகூட உருப்படியா பேசத்தெரியாது ...இவர் அங்கேபோய் ...


கல்யாணராமன்
மார் 29, 2025 17:56

செங்கோட்டையன் யாரை சந்தித்தார் என்று யாரிடம் கேட்கிறீர்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டுமா நாங்கள் சொல்ல வேண்டுமா?


Oviya Vijay
மார் 29, 2025 17:46

உங்க கட்சிக்குள்ளேயே ஆயிரம் ஓட்டைகள்... இந்த லட்சணத்தில் இவர்கள் இன்னொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போகிறார்களாம்... அந்த கட்சியுடனும் உங்களுக்கு வாய்க்காத் தகராறு... இவர்களுக்குள் கூட்டணி அமையுமானால் பிரச்சார மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு டேரக்ஸனில் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பர்... மக்களின் பார்வையில் சிம்பிளாக உங்களுக்குள்ள சண்டையை ஓரமா போயி போட்டுக்கிட்டு ஒரு முடிவுக்கு வாங்க என்று இவர்கள் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுவர்... தற்போது சூழ்நிலையில் தமிழகத்தில் போட்டி என்றால் அது திமுகவுக்கும் தவெகவுக்கும் தான்...


பயம பாமரன்
மார் 29, 2025 18:37

உலக மகா காமெடி தவெகா. 2026க்கு பின் இருக்காது. மநீம மாதிரி


Appa V
மார் 29, 2025 18:45

அதிமுகவில் ஓட்டைகள் என்றால் திமுகவில் குட்டைகளும் கூவம்களும் தானே


பேசும் தமிழன்
மார் 29, 2025 19:04

இது யாரப்பா.... அப்பப்ப வந்து காமெடி பண்ணிக்கிட்டு..... இவரது விடியல் கட்சிக்கும்.... அவர்களது B டீம் த வெ க கட்சிக்கும் போட்டியாம்.


சமீபத்திய செய்தி