உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவிந்தன 1.25 கோடி மனுக்கள்: கூட்டுக்குழு எம்.பி., அதிர்ச்சி; வெளிநாட்டினர் கைவரிசை என சந்தேகம்

குவிந்தன 1.25 கோடி மனுக்கள்: கூட்டுக்குழு எம்.பி., அதிர்ச்சி; வெளிநாட்டினர் கைவரிசை என சந்தேகம்

புதுடில்லி: வக்பு வாரிய சட்டதிருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட பார்லி கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளன. இதில் வெளிநாட்டினர் பங்கு இருக்கலாம் என பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே சந்தேகம் தெரிவித்துள்ளார். இதற்கு காங்., கண்டனம் தெரிவித்து உள்ளது.

சட்ட மசோதா

வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. விவாதத்தின் மீது மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.

1.25 கோடி கருத்துகள்

இந்த குழுவுக்கு பா.ஜ., எம்.பி., ஜகதாம்பிகா பால் தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவினர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் தங்களது கருத்துகளை இமெயில் மூலம் தெரிவிக்கலாம் என அந்தக்குழு கூறியிருந்தது. அந்த வகையில் 1.25 கோடி கருத்துகள் இமெயில் மூலம் வந்துள்ளன. இந்தளவுக்கு கருத்துகள் வரும் என பார்லி கூட்டுக்குழுவே எதிர்பார்க்கவில்லை.

சந்தேகம்

இதில் சந்தேகம் தெரிவித்து ஜகதாம்பிகா பாலுக்கு, பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கூட்டுக்குழுவுக்கு வந்த பதில்கள் முன் எப்போதும் இல்லாதது. உலக சாதனை படைத்து உள்ளது. இதன் பின்னணியில் சீனா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் ஜாகிர்நாயக் போன்றவர்களின் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது. ஜனநாயக நடவடிக்கையை கெடுக்கும் நோக்கில் அதிக பதில் அனுப்ப வெளிநாட்டு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஈடுபடலாம் என்ற சந்தேகம் உள்ளது. பதில்கள் அனைத்தும் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

கற்பனை

இதற்கு பதிலளித்து அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தளவு பதில் வரும் என எதிர்பார்த்தது தான். உண்மையில் பார்லி கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளதாக குறைத்து கூறுகின்றனர். 3.7 கோடி முஸ்லிம்கள், எங்கள் சார்பில் கருத்துகளை அனுப்பி உள்ளனர். மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து கருத்துகளை அனுப்பி உள்ளனர். இதன் மூலம் பார்லி கூட்டுக்குழுவுக்கு 5 கோடி கருத்துகள் வந்திருக்கலாம். அரசு கேட்டு கொண்டுள்ளதால், பதில்கள் வந்துள்ளன. இவ்வளவு பேர் பதிலளித்ததில் என்ன பிரச்னை இருக்க முடியும். வெளிநாட்டினரின் பங்கு என்பது கற்பனையானது. பொது சிவில் சட்டம் குறித்து 4.85 கோடி பேர் கருத்து அனுப்பி இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசின் கோஹில் கூறியதாவது: இந்தியா போன்ற பெரிய நாட்டில், 1.5 கோடி மக்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளதற்கு பா.ஜ.,வுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Mohan
செப் 29, 2024 20:17

செத்தும் கெடுத்தான் எனபது போல, செத்தும் கெடுத்தவர்கள் ஜவாஹிருல்லா கான் என்கிற நேரு, மற்றும் முகமது கான் ம்.கே.காந்தியும் தான். ஏனய்யா எல்லா அரசர்களிடமிருந்தும் நிலங்களின் முழு உரிமையாளர்கள் .. பல ராஜ்ய அரசர்களே . முழுவதுமாக பாரத தேசத்திற்கு எழுதிக் கொட


N Sasikumar Yadhav
செப் 28, 2024 21:54

பாரதத்தில் தனியார் அமைப்புகளுக்கு அதிகளவு நிலங்கள் இருக்க கூடாது பறிமுதல் செய்ய வேண்டும் மதம் அடிப்படையில் தனியாக நாடு பிரித்துக் கொண்டு சென்றபிறகு எப்படி வந்தது இவ்வளவு நிலம் .


Rajasekar Jayaraman
செப் 28, 2024 20:50

இந்த கொள்ளை கூட்டம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று ஏன் வருகிறான்.


venugopal s
செப் 28, 2024 17:12

நீங்கள் தானே கருத்து கேட்டீர்கள், அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர். அப்புறம் எதற்கு சந்தேகிக்க வேண்டும்?


Bahurudeen Ali Ahamed
செப் 28, 2024 15:45

திரு சாய் அவர்களே, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள், ஆண்ட்ராய்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் நிச்சயமாக ஈமெயில் ஐடி இருக்கும். 1.25 கோடி கருத்து என்பது குறைவான எண்ணிக்கைதான்


Ganesun Iyer
செப் 28, 2024 15:14

சுடுகாட்டு இடத்துல குடிசை போட விட்டுடறது அப்பறம் அதை குடிசைமாற்று வாரியம்னு சொல்லிட்டு இடத்தை பில்ட்டிங் கட்டி வித்துற வேண்டியது .. அரசாங்கமே செய்யுது ...


GMM
செப் 28, 2024 13:55

வக்பு என்பது உருது, ஆங்கிலத்தில் உள்ளது. பல இந்திய மொழிகள் இருந்தும் தாய் மொழியில் எழுத கூட விருப்பம் யில்லை. நாடு முழுவதும் நிலம் ராணுவம், இரயில்வே போன்ற பொது சேவை துறைக்கு மட்டும் ஒரு பெயரில் இருப்பது பொருந்தும். கட்சி, சாதி, மதம் போன்றவை களுக்கு பொருந்தாது. தனி நபர் மூலம் நிலம் சேகரித்து அரசை இழுக்காமல் செய்து கொள்ளலாம். வக்பு போர்டு அமைப்பது சட்ட விரோதம். ஒரு இடத்தை உரிமையாளர் மட்டும் கோர முடியும். மத இயக்கம், அமைப்பு கோர முடியாது. 125 கோடி மனுக்கள் வந்தாலும் அச்சம் கூடாது. உலகில் வேறு எங்கும் இதுபோன்ற வாரியம் உள்ளதா. கிரயம் பெறாத பாரத நாட்டில் ஒரு சதுர மீட்டர் நிலம் கூட இஸ்லாமிய, கிருத்துவ மதத்தினருக்கு சொந்தம் அல்ல. இது வரை அனுபவித்து வருவதற்கு கொடகூலி கொடுக்க வேண்டும். கூட்டு குழுவில் 100 ஆண்டுக்கு முன் சொத்து உள்ளவர்கள் இருக்க வேண்டும். திமுக, காங்கிரஸ் போன்ற திடீர் பணக்காரர்களுக்கு / நில அபகரிப்பு காரர்களுக்கு ஒன்றும் புரியாது.


sridhar
செப் 28, 2024 13:05

தவறு என்றால் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் கருத்து எதுக்கு .


Kumar Kumzi
செப் 28, 2024 11:37

கூட்டாளிங்களுக்கு அனுப்ப சொல்லிருப்பார்


Kumar Kumzi
செப் 28, 2024 11:33

வக்பு வாரிய சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை