உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய மத்திய அமைச்சர்களாக யாருக்கு வாய்ப்பு ?

புதிய மத்திய அமைச்சர்களாக யாருக்கு வாய்ப்பு ?

புதுடில்லி: பிரதமராக மோடி, இன்று( ஜூன்09) 3வது முறையாக பதவியேற்க உள்ளார். பிரதமர் உடன் இன்று 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பா.ஜ.,வை சேர்ந்த ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மேவால், சர்பானந்தா சோனவல், கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, தர்மேந்திர பிரதான், ஹர்தீப் புரி, கஜேந்திர ஷெகாவத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் மீண்டும் அமைச்சர்கள் ஆவார்கள் என தெரிகிறது. புதிதாக பா.ஜ., தலைவர் புரேந்தஸ்வரி, சிவராஜ் சிங் சவுகான்,பாஜ.,வின் சிஆர் பாட்டீல், ராவ் இந்தர்ஜித் சிங், நித்யானந்தராய், பகிராத் சவுத்ரி, ஹர்ஸ் மல்ஹோத்ரா, ஜிதின் பிரசாதா, ரக்ஷா கட்சே, பண்டி சஞ்சய்குமார், கிஷன் ரெட்டி , சுரேஷ் கோபி, ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.தற்போது பா.ஜ., தேசிய தலைவராக இருக்கும் நட்டாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், முருகன் , ஜெயசங்கர் ஆகிய 3 பேரும் அமைச்சர்கள் ஆவார்கள் என தெரிகிறது. தெலுங்கு தேசம், ஐ.ஜ.த., கட்சிக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும்.தெலுங்கு சேத்தின் ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மசானிஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்கூர் மற்றும் லாலன் சிங்,லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான்,ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் ஜித்தன்ராம் மஞ்சி,அப்னா தள கட்சியின் அனுபிரியா படேல்ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் ஜெயந்த் சவுத்ரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ஆகியோர் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஏஜேஎஸ்யூ, ஆர்பிஐ, ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மத்திய அமைச்சர் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
ஜூன் 09, 2024 19:05

கங்கனா, நவநீத் ராணா, சௌமியா அன்புமணி ஆகியோருக்கு மந்திரி பதிவை கொடுக்கப்படவேண்டும்


சந்திரசேகர்
ஜூன் 09, 2024 14:14

அய்யா உங்களுக்கு ஒரு விண்ணப்பம் எப்படியாவது கோதாவரி காவிரியை இணைத்து விடுங்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி