மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4
பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு, நீதிபதி தினேஷ் குமாரின் பெயரை, உச்ச நீதிமன்ற கொலிஜியம் சிபாரிசு செய்துள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரசன்ன வர்ளே, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனால் காலியாகும் இடத்துக்கு, நீதிபதி தினேஷ் குமாரின் பெயரை, உச்சநீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு நேற்று சிபாரிசு செய்தது.கடந்த 2015ல், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி தினேஷ்குமார், நீதி மற்றும் நிர்வாக பிரிவில் அதிக அனுபவம் பெற்றவர் என, கொலிஜியம் கூறியுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்ற இரண்டாவது மூத்த நீதிபதியான தினேஷ் குமார், நடப்பாண்டு பிப்ரவரி 24ல் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக, தலைமை நீதிபதி பிரசன்ன வர்ளேக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால், தினேஷ்குமார் தலைமை நீதிபதியாகிறார்.
1 hour(s) ago | 4