உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதை யார் தடுத்தது? உமர் அப்துல்லா கேள்வி

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதை யார் தடுத்தது? உமர் அப்துல்லா கேள்வி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பதை யார் தடுத்தது. முடிந்தால் மீட்கட்டும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.லண்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் காத்திருக்கும் பகுதி, சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் ' திருடப்பட்ட' பகுதியைத் திரும்பப் பெறுவது என்று நினைக்கிறேன். அது முடிந்ததும் காஷ்மீர் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்றார்.இது தொடர்பாக காஷ்மீர் சட்டசபையில் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற முடிந்தால் அதனை செய்யட்டும். அவர்களை யார் தடுத்தது. முன்பு காங்கிரஸ் கட்சியை பா.ஜ., விமர்சித்தது. ஆனால், கார்கில் போரின் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், அதனை செய்யவில்லை. அப்பகுதியை திரும்பக் கொண்டு வர முடியுமானால், அதனை தற்போது செய்ய வேண்டும்.ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது.மற்றொரு பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இதனை பற்றி யாரும் பேச மறுப்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sankar Ramu
மார் 07, 2025 18:23

மீட்க நீ முதல்வரா என்ன செய்வ?


karthik
மார் 07, 2025 14:12

உங்கள் வாயில் இருந்து இந்த வார்த்தை வரவேண்டும் என்று தான் எதிர்பாத்திருக்கு மோடி அரசு


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 11:36

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து பிரித்த பின்னர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானகவே இந்தியாவோடு இணைந்து விடும். இது தனி யூனியன் பிரதேசமாக இந்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். ஜி ஸ்கொயர் சிட்டி கூட அங்கு மனை பிரித்து விற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


orange தமிழன்
மார் 07, 2025 11:05

well said......yes your honor


Yes your honor
மார் 07, 2025 10:30

திராவிட மாடல் காஷ்மீர் வரை பரவியுள்ளது என்பதை இப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறு தமிழகத்தில் கள்ளநிதி கச்சத்தீவை தனது சுயநலம் என்னும் ஒரே காரணத்திற்காக தாரை வார்த்தானோ, அதனால் இன்று தினம் தினம் தமிழக மீனவர்கள் அல்லல்பட்டுக் கொண்டுள்ளார்களோ, அதேபோன்று இந்த உமரும் அவனது அப்பாவும், பாகிஸ்தானின் ...க்கு ஆசைப்பட்டு காஷ்மீரை தாரை வார்த்திருந்தனர். இப்பொழுதும் கூட இந்த உமர் கூறுவது எகத்தாளம் தானே அன்றி, வேறொன்றுமில்லை. இது இன்று ஆட்சித் திறனற்றவர்கள் கூட்டம், எவ்வாறு கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்று கூருகிறார்களோ, அதே மாடலுக்கு ஒத்துப்போகிறது. அதுதான் திராவிட மாடல், செய்வதெல்லாம் இவர்கள், பழி எல்லாம் அடுத்தவர்கள் மீது.


veeramani
மார் 07, 2025 09:31

திரு குட்டி அப்துல்லா ... உங்களது தாத்தா இடக்கு மூடாக்காக பேசி கோடைகானலில் வீட்டுக்காவலில் இருந்தது தெரியாதா? உங்களது தகபனார் அப்துல்லா தீவிரவாத செயலுக்கு துணை சென்றதில்லையா. அவர் காஷ்மீரில் ஆட்சி புரிந்த போது கற்றாவும் அமர்நாத்தும் செல்லமுடிந்ததா?? தற்போதும் குறைந்த மெஜாரிட்டியில் உள்ள நீங்கள் இவ்வாறு பேசலாமா. ஆக்ரிமிப்பில் உள்ள காஷ்மீரை இந்திய பகுதிகளை மீட்பதற்கு நான் உதவுகிறேன் என சொல்ல முடியவில்லையா. உங்காத்து ஆட்சி இதுதானா??


Mecca Shivan
மார் 07, 2025 08:49

முடிந்தால் மீட்கட்டும் என்று சொல்வதே திராவிட ஸ்டைலில் உள்ளது ..பிரிவினைவாதம் எதிரிநாட்டுக்கு ஆதரவு என்று கொப்பளிக்கிறது


பேசும் தமிழன்
மார் 07, 2025 08:18

உன் குடும்பம் மற்றும் முப்தி முகம்மது குடும்பம்.... இரண்டையும் காஷ்மீரில் இருந்து விரட்டி அடித்தாலே போதும்.... மொத்த காஷ்மீரும் அமைதி மாநிலமாக மாறி விடும்.


Kasimani Baskaran
மார் 07, 2025 06:51

நல்லது. விரைவில் மீட்கப்படும்.


Appa V
மார் 07, 2025 06:22

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் குடியமதப்பட்டுள்ளார்கள் ..சாலை வசதிகளோ மின்சார வசதியோ கிடையாது ..நாம் அந்த பகுதியை ஆக்கிரமிக்க வேண்டாம்.. பலுசிஸ்தான் கைபர் பக்துன்வா சிந்து கராச்சி என்று தனி தனியாக பிரிய வாய்ப்பிருக்கிறது


புதிய வீடியோ