உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., பதில் கூறியது ஏன்?

பா.ஜ., பதில் கூறியது ஏன்?

மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனிடம் காங்., - எம்.பி., ராகுல் கேள்வி கேட்டார்; பா.ஜ.,விடம் அல்ல. ஆனால், அக்கட்சி வரிந்து கட்டி வந்து பதில் கூறியது ஏன்? தேர்தல் சந்தேகங்களை தீர்க்க, பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் ஏதாவது ஒப்பந்தத்தை வழங்கி உள்ளதா?சஞ்சய் ராவத்ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் தரப்பு

தெளிவுபடுத்த வேண்டும்!

பாரத மாதா யார் என்பதை கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தெளிவுபடுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடம் இருந்து தேச பக்தியை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக இந்த அமைப்பினர் சிறு துரும்பை கூட எடுத்து வைக்கவில்லை. டி.ராஜாபொதுச்செயலர், இ.கம்யூ.,

எந்த பலனும் இல்லை!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எனினும், நாட்டு மக்கள் எந்த பலனும் அடையவில்லை. இந்த 11 ஆண்டுகளில், நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புக்கு ஒரு பலத்த அடி விழுந்துள்ளது. பா.ஜ.,வின் சர்வாதிகார போக்கு தொடர்கிறது.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி