உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?

குழந்தை பெற்ற பெண்கள் மரணம் ஏன்?

பல்லாரி: பல்லாரி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி பகீர் தகவல் கூறி உள்ளார்.பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை அறை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.பின் அவர் கூறுகையில், ''மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறை சுத்தமாக இல்லை. காலாவதியான குளுக்கோஸ்கள் மட்டுமின்றி, சுகாதார சீர்கேடும், குழந்தை பெண்கள் இறப்பதற்கு காரணமாக இருக்கலாம். அறுவை சிகிச்சைக்கு பின், பெண்கள் வயிற்றுப் புண்ணில் பாக்டீரியா தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. துாய்மை இல்லாவிட்டால் தொற்று அதிகரிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை