உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்?: கேட்கிறார் மம்தா

கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்?: கேட்கிறார் மம்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அம்தங்கா என்ற இடத்தில் தேர்தல் பேரணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: சந்தேஷ்காலி சம்பவம் குறித்து இன்னும் பா.ஜ.,வினர் பொய்களை கூறி வருவதால் பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக எந்த குற்ற சம்பவங்களும் நடக்கவில்லை. மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார்கள் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை.

பாலியல் பலாத்காரம்

ராஜ்பவன் ஊழியர் ஒருவர் கவர்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பா.ஜ.,வின் உண்மையான பெண் விரோதப் போக்கைக் காட்டுகிறது. இதுவரை கவர்னரை ராஜினாமா செய்யும் படி பிரதமர் ஏன் கேட்கவில்லை?. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.ஆனந்த போஸ் மீது, கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் அளித்ததில் இருந்து பதவியை ராஜிமானா செய்யுமாறு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajasekar Jayaraman
மே 13, 2024 10:10

2019 சக்கர நாற்காலியின் நடிகை நீங்கதான் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ரிசைன் செய்ய வேண்டும்


Kasimani Baskaran
மே 13, 2024 05:48

மாடல் அரசின் கோட்பாடுகளை பயன்படுத்தினால் மம்தா கட்சியிலுள்ளவர்களே கூட மம்தாவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்


R Kay
மே 13, 2024 02:04

மாநில அரசுகள் எல்லை மீறி ஆட்டம் போடும்போது கடிவாளம் போடவே கவர்னர் பாஜகவின் -வது சட்டப்பிரிவை உபயோகிக்க வேண்டிய நேரத்திலும் உபயோகிக்காத கொள்கை எரிச்சலூட்டுகிறது மக்கள் ஐந்தாண்டுகள் கொடுமையை அனுபவித்தே ஆகவேண்டுமா?


C.SRIRAM
மே 12, 2024 21:28

ஜனாதிபதி தலையிட்டு இந்த பதவி வெறி பிடித்த அரசியல் வியாதியை எச்சரிக்க வேண்டும்


sankaranarayanan
மே 12, 2024 20:36

ஆளுநர் மீது பாலியல்கொடுத்ததுபோன்று ஏன் அங்கே முதல்வர் மீதும் பாலியல் தொல்லை புகார் கொடுக்கக்கூடாது யாராவது முன்வருவார்களா


ஆரூர் ரங்
மே 12, 2024 19:41

.அதாவது யாரையாவது பிடிக்கலைன்னா பொய்யான புகாரை உருவாக்கி விலகச் சொல்லணும். இதெல்லாம் ஓல்டு ஃபேஷன் மம்மு.


M Ramachandran
மே 12, 2024 19:32

கவனரய் துரத்தி விட்டு மக்களை லுட் அடிக்க வேண்டும் எதிர் கட்சியினாரையம் மக்களையம் விரட்டி விரட்டி அடிக்க வேண்டும் அல்லது கொல்ல வேண்டும் அப்புறம் வங்கதேச தேசத்திலிருந்து இறக்கு மதி செய்யும் முதலில் இந்த தேச விரோத செயலில் ஈடு படும் ஆட்டம் போடும் பம்மும் படி ஓட விட வேண்டும்


P. VENKATESH RAJA
மே 12, 2024 19:26

மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது உள்ள பாலியல் புகார் மீது விரிவான விசாரணை நடத்த வேண்டும்


C.SRIRAM
மே 12, 2024 21:29

இதையும் நம்புவாங்க ? கொஞ்சம் அறிவை உபயோகிப்பது நல்லது


M Ramachandran
மே 12, 2024 19:21

உங்க கட்சி ஆளுகளுக்கு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா


R Gopal
மே 12, 2024 19:15

PM cannot ask the Governor to resign Only the president can dismiss him


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை