உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்

புதுடில்லி: பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அவர் ''பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் '' என கடுமையாக சாடினார்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gue0c2xz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக இன்று (மே 07) காலை 10.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் ஆகியோர் உடன் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம். காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டு பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான். பயங்கரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது; பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தாத பாக்., அரசு அவர்களை ஆதரிப்பது அனைவருக்கும் தெரியும்.

21 முகாம்கள் அழிப்பு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 இடங்களில் 21 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

அடுத்தடுத்து தாக்குதல்

கடந்த மார்ச் மாதம் 4 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்; அதற்கு பயங்கரவாதிகள் பயிற்சி எடுத்த சர்ஜால் சாய்ல்கோட் முகாம் அழிக்கப்பட்டது. பதான்கோட் தாக்குதலுக்குத் திட்டம் வகுக்கப்பட்ட மெஹ்மூனா ஜோயா முகாம் அழிக்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கான பயிற்சி கொடுத்த மார்கஸ் டைபா முகாமும் தகர்க்கப்பட்டது. அஜ்மல் கசாப் பயிற்சி எடுத்ததும் இங்கு தான். முசாபராபாத்தில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பயிற்சி மையம் குறிவைத்து அழிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பெண் அதிகாரிகள் பேட்டி

இது குறித்து பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விங் காண்டர் வியோமிகா சிங் கூறியதாவது: 21 பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் உயிரிழக்க வில்லை. பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றனர்.

வீடியோ வெளியீடு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தினர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்த தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Chandran Subramaniam
மே 08, 2025 16:47

தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்


Kasimani Baskaran
மே 08, 2025 03:50

இராணுவம்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கிறது என்பதற்கு தீவிரவாதிகளின் மரண சடங்குகளில் பாகிஸ்தான் இராணுவம் பங்கேற்றது அணைத்து ஊடகங்களிலும் வந்தது - ஆகவே பாகிஸ்தானிகள் மானங்கெட்ட கேடிகள் என்பது வெட்டவெளிச்சமாகிறது. ஆகவே இராணுவ இலக்குகளை தாக்குவதற்கு தயங்கக்கூடாது.


Suresh sridharan
மே 07, 2025 16:09

ஒன்றும் சொல்ல வேண்டாம் உங்கள் உழைப்பை கொட்டிக் கொடுங்கள்


Ramesh Sargam
மே 07, 2025 13:10

பெண்கள் தங்கள் பூவையும், பொட்டையும் இழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் .


Anonymous
மே 07, 2025 13:04

விளக்கமெல்லாம் வேண்டாம் ஜி, சும்மா உங்க பாணியில் மிலிட்டரி ஸ்ட்ரைக் செஞ்சு, கூடாரத்தை ஒழிச்சு கட்டுங்க. அதுக்கு இந்தியர்களின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் எப்போதும் எங்கள் இந்திய இராணுவ வீரர்களுக்கு .....


Ramesh Sargam
மே 07, 2025 12:49

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒட்டுமொத்த இந்தியாவே சந்தோஷப்படும் இந்நேரத்தில், நம் நாட்டில் உள்ள, நம் நாட்டு உப்பை, நம் நாட்டு சோரை தின்னும் ஒரு சில தேசதுரோகிகள் அதைப்பற்றி ஒரு கருத்துகூட தெரிவிக்கவில்லை.


sridhar
மே 08, 2025 08:39

ரூம் போட்டு அழுதுகிட்டு இருக்காங்க .


சுலைமான்
மே 07, 2025 12:44

ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்! ஜெய் ஜவான்


India our pride
மே 07, 2025 12:30

1. சிந்தூர் என்பது பெண்களின் குங்குமத்தை குறிக்கும். மனைவியருக்கு முன்னாலேயே அவர்களுது குங்குமத்தை பறித்த மத காட்டுமிராண்டிகளுக்கு அளிக்கப்பட்ட சரியான பரிசு. 80-90 தீவிரவாதிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் எமலோகம் அனுப்பபட்டு உள்ளனர். 2. ஏப்ரல் 22 இல் இருந்து இன்று 16 நாள் ஆகிறது. சனாதன வழக்கப்படி இறந்த ஆன்மா 15 நாட்கள் இங்கு உலகத்தில் தங்கி இருந்து, 16 வது நாளில் இறந்தோர் உலகம் செல்வதாக கருட புராணம் சொல்கிறது. அதற்கு ஏற்றாற்போல 16 வது நாளில் காட்டுமிராண்டிகளை நரகத்திற்கு அனுப்பியது நல்ல செய்தியாகும்.


Ramesh Sargam
மே 07, 2025 12:29

இன்று விடிகாலை பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் கூடாரம் மீது நடந்த தாக்குதல் ஒரு சிறு தாக்குதல். ஒரு சிறிய சாம்பிள். இதை மீறியும் பாகிஸ்தான் வாலாட்டினால், பெரிய சம்பவம் இருக்கு. அது வேண்டாமென்றால், இந்தியாவிடம் இனியும் வாலாட்டாதீர்கள்.


ஆரூர் ரங்
மே 07, 2025 12:09

கடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல இதற்கும் ஆதாரம் கேட்க திமுக காங்கிரஸ் நகர நக்சல் கும்பலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள் உபீஸ் .200 நஷ்டம்


சமீபத்திய செய்தி