ஆதரிப்பது ஏன்?
நம் நாட்டில் கடவுள்கள், துறவியர் பிளவுபட்டுள்ளனர். இது நடக்கக்கூடாது என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். தங்கள் சித்தாந்தத்துக்கு எதிராக செயல்படும் பா.ஜ., அரசை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சைவெறுப்பை பரப்பும் காங்.,
தேர்தல் தோல்விகளால் மன சோர்வில் இருக்கும் காங்., தலைவர்கள், பிரதமர் மோடி மீதும், பா.ஜ., மீதும் வெறுப்புகளை பரப்பி வருகின்றனர். தோல்விக்கான காரணத்தை அறிய சுய பரிசோதனை செய்யாமல், பொய்களை அவர்கள் பரப்பி வருகின்றனர். இனி வரும் தேர்தல்களிலும் காங்., தோல்வி அடையும்.முக்தார் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,எந்த பேச்சும் இல்லை!
கேரளாவில் எந்த விவகாரமாக இருந்தாலும் முதல்வர் பினராயி விஜயனுடன் நேரடியாக 'டீல்' செய்வேன். மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் போன்றோரிடம் எனக்கு எந்த பேச்சும் இல்லை.ஆரிப் முகமது கான், கேரள கவர்னர்