உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை, நாளை (ஜூன் 19) தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவே, மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என, ஜெயராம்ன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.அதை ஏற்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அமர்வு, இன்று (ஜூன் 18) விசாரித்தது.அப்போது ஜெயராம் தரப்பில், ''விசாரணைக்கு ஒத்துழைப்பால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது'' என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர். சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை நாளை தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, தமிழக அரசு நாளை விளக்கம் அளித்த பிறகு, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanyan
ஜூன் 18, 2025 19:58

Why so fast judgement. Are these judges treat the common man like this. What is the urgency. He spared his official vehicle and he had part in the scandal. Why these SC judges thinks they are supreme. They also get elevated with some norms from high court. Do they believe high court judges do not know the laws and regulations. Certainly by reinstament he will obviously will use his influence on others .common man.will SC judges protect the innocents. Sir lakhs of cases are pending for number of years.pl. Consider.


Raja
ஜூன் 18, 2025 18:10

பின்னே கொஞ்சவா முடியும்? இன்னும் சொல்லப்போனால் டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்...


Sudha
ஜூன் 18, 2025 17:50

Sorry to note, Honourable Supreme Court takes up a third rate criminal case for urgent hearing. Having taken up, if tge suspension is found unjustified, pkease ensure the suspension of the concerned authority, whether minister or government secretary. We feel we have a fundamental right to understand your approach and stand


என்றும் இந்தியன்
ஜூன் 18, 2025 16:15

அப்போ இதுக்கு பதில் சொல்லுகின்றாயா உச்சா போகும் நீதிமன்றமே எல்லா கோர்ட்டுகளில் மொத்தமாக 5.14 கோடி வழக்குகள் pending ஏன் 22 வருடமாக????இந்த வழக்கை எவ்வளவு மாதங்கள் விசாரிப்பாய்???ஒரு பைசாவுக்கு பிரயோஜனமில்லை???வெறும் கேள்வி கேட்பது??? நீ எப்போ தான் நீதிமுறையில் வழக்கை விசாரித்து விரைவாக தீர்ப்பு வழங்குவாய்??


Sudha
ஜூன் 18, 2025 14:46

இங்கே இருக்கிற பிரச்சனைகளுக்கு...


முக்கிய வீடியோ