உள்ளூர் செய்திகள்

பரவலான மழை

புதுடில்லி:மத்திய டில்லி, தெற்கு டில்லி மற்றும் தென்கிழக்கு டில்லியில், நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கும் அபாயம் இருப்பதால், எச்சரிக்கையாக இருக்கவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.வெப்பநிலை, 34 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காலை, 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 60ஆக இருந்தது. இது திருப்தியான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி