உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி கைது

கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிவானி: ஹரியானாவில், காதலன் உதவியுடன் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிக் கொன்று, உடலை கால்வாயில் வீசிய, 'யு டியூபர்' மனைவியை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவின் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. 'பேஸ்புக், இன்ஸ்டா' உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள இவர், யு டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ரவீணாவுக்கும், பிரவீன் என்பவருக்கும், கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, 6 வயதில் மகன் உள்ளார்.இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி ரவீணா சேனலில் பதிவிட்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர் பிரவீன், ரவீணாவை கண்டித்தார். இதற்கிடையே, ரவீணா மற்றும் சுரேஷ் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். கடந்த 25ம் தேதி பிரவீன் வீடு திரும்பிய போது, சுரேஷ் மற்றும் ரவீணா தனிமையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் இரவே, காதலன் உதவியுடன் கணவர் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து ரவீணா கொன்றார். பின்னர், இருவரும் சேர்ந்து அவர் உடலை, ஊருக்கு வெளியே உள்ள கால்வாயில் வீசினர். பிரவீன் குடும்பத்தார் கேட்ட போது, அவரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என ரவீணா கூறி வந்தார். இதைத் தொடர்ந்து பிரவீன் குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். அதே சமயம், கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடல் பிரவீனுடையது தான் என சில நாட்களுக்கு பின் அடையாளம் காணப்பட்டது. இதற்கிடையே, ரவீணா மற்றும் சுரேஷ் இருவரும் பிரவீன் உடலை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து, ரவீணாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அனைத்து உண்மைகளும் வெளிவந்தன. கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று ரவீணாவை கைது செய்தனர். தப்பியோடிய காதலன் சுரேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M Ramachandran
ஏப் 17, 2025 12:13

அந்த திருட்டு உறவு பாடாயை படுத்தது இப்பொ காதலனுடன் ஜெயில் களி ருசித்து சாப்பிட்டு காலம் தள்ள வேண்டியதுதான்.


vels
ஏப் 17, 2025 10:43

இதே தமிழ் நாட்டில் நடந்திருந்தால் திரவிசம் கலாச்சாரம் என எம்பி குதித்திருப்பார்கள்


Sampath Kumar
ஏப் 17, 2025 09:23

கொலையும் செய்வாள் பத்தினி பெண் உண்மை தான் போல அனால் பத்தினி தன்மை இங்கே பொய் விட்டதே காமம் கண்ணை மறைத்து விட்டது புரட்சி பெண்களின் புதுமை தனம் இது தான் போல ஆண்களே உஷாரு


VENKATASUBRAMANIAN
ஏப் 17, 2025 08:18

கலிகாலம் முற்றி விட்டது. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற செயல்களை கற்றுக் கொள்கிறார்கள். கலாச்சார சீரழிவு.இதுதான் பெற்றோர்கள் முக்கிய காரணம்.


SENTHIL NATHAN
ஏப் 17, 2025 07:21

கள்ள காதல் என்பது பற்றி தீர்ப்பு ஸொண்ண நீதிபதிகலுக்கு இந்த பாவம் சேருமங


நிக்கோல்தாம்சன்
ஏப் 17, 2025 06:29

விமுக மாடல் ஹரியானா வரை போயிடுச்சு கனிமொழி அக்கா பெருமைப்படுங்க


Rajathi Rajan
ஏப் 17, 2025 10:56

விமுக மாடல் ஹரியானா வரை போயிடுச்சு, நிக்கோல் விமுக மாடல் உன் வீட்டுக்கு வந்து பல வருடங்கள் ஆச்சு? அதுகூட தெரியாம நீ இங்க வந்து கருத்து வன்மத்தை கக்குற? அண்ணா நிக்கோல் ஹவுஸ்ல???


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 17, 2025 06:16

தப்பியோடிய காதலன் சுரேஷை தேடி வருகின்றனர். ........ என்னது ?? இதுவரைக்கும் கம்பியானவனா கம்பி நீட்டிட்டான் ?? புரியல்லேன்னா மல்லுவைக் கேளுங்க .....


புதிய வீடியோ