உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்: 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்: 4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த கணவர்

முசாபர்நகர்: உ த்தர பிரதேசத்தின் ஷாமிலி பகுதியை சேர்ந் த கூலித்தொழிலாளி சல்மான், 38. இவருக்கு, 15 ஆண்டுக்கு முன் குஷ்னுமா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மஹா, 12, ஷிபா, 5, அமன், 3, மற்றும் இனாய்ஷா என்ற 8 மாத குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், சல்மானுக்கும் குஷ்னுமாவுக்கும் அடிக்கடி சண்டை நடந்தது. கடந்த 3ம் தேதி குஷ்னுமா குழந்தைகளை விட்டு விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மனமுடைந்த சல்மான், நான்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கு பாயும் யமுனை ஆற்றுக்கு சென்றார். அங்கு பாலத்தின் மீது இருந்து குழந்தைகளை ஆற்றில் வீசினார். பின் தானும் ஆற்றில் குதித்தார். சல்மான் உட்பட ஐந்து பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முன்னதாக சல்மான் தன் குழந்தைகளுடன் வீடியோ எடுத்து, அதை தங்கை குலிஷ்டாவுக்கு மொபைல் போனில் அனுப்பியுள்ளார். அதில் ஐந்து பேர் தற்கொலைக்கும் மனைவி குஷ்னுமாவும், அவரது காதலனும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசில் குலிஷ்டா புகார் தெரிவித்துள்ளார். 'மொபைல் போன்' கோபுரத்தில் கிடைத்த சிக்னல் அடிப்படையில், யமுனா ஆற்றங்கரைக்கு நீச்சல் வீரர்களுடன் சென்ற போலீசார், ஆற்றில் விழுந்த ஐந்து பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை