உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி தற்கொலை; கணவருக்கு 7 ஆண்டு சிறை

மனைவி தற்கொலை; கணவருக்கு 7 ஆண்டு சிறை

தாவணகெரே : மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து, அவரை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தாவணகெரே, சென்னகிரியின் மானமட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோகேஷ், 32. இவர் சுமித்ரா, 27, என்ற பெண்ணை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில், யோகேஷின் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. இதே காரணத்தால் தம்பதிக்கிடையே, மனஸ்தாபம் ஏற்பட்டது.குடும்பத்தினர் பேச்சை கேட்டு கொண்டு, மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். இவரது கொடுமை அதிகரித்ததால், மனம் வருந்திய சுமித்ரா, 2019 பிப்ரவரி 27ல் தற்கொலை செய்து கொண்டார்.மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவர் யோகேஷை, சென்னகிரி போலீசார் கைது செய்தனர்.விசாரணையை முடித்து, தாவணகெரே ஒன்றாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், ஏழு ஆண்டு சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ