உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு தசராவை முஸ்லிம் பெண் துவக்குவதா? பா.ஜ., ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் சர்ச்சை

மைசூரு தசராவை முஸ்லிம் பெண் துவக்குவதா? பா.ஜ., ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பால் சர்ச்சை

பெங்களூரு: நடப்பாண்டு மைசூரு தசராவை, 'புக்கர்' விருது பெற்ற பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைக்க, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் மைசூரு தசராவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் சாமுண்டி மலையில் நடக்கும் விழாவை, புகழ் பெற்ற சாதனையாளர் துவக்கி வைப்பது வழக்கம். இந்தாண்டு மைசூரு தசரா விழா, செப்., 22 முதல் அக்., 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. 'நடப்பாண்டு விழாவை, 'புக்கர்' பரிசு பெற்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் துவக்கி வைப்பார்' என, முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2023ல் நடந்த மக்கள் சாகித்ய சம்மேளன கூட்டத்தில் பேசிய பானு முஷ்டாக், 'கன்னடத்தை மொழியாக ஏற்காமல், எங்கள் வீட்டில் கன்னடம் பேச முடியாமல் செய்து விட்டீர்கள். 'கன்னட மொழியை, கன்னட புவனேஸ்வரி தாயாக மாற்றி விட்டீர்கள். கன்னடத்துக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து, புவனேஸ்வரியாக மாற்றி விட்டீர்கள்' என்று பேசியிருந்தார். இந்நிலையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் மற்றும் ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஹிந்து பாரம்பரியம், ஹிந்து பழக்க வழக்கங்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு பானு முஷ்டாக் வந்தால் வரவேற்போம். புக்கர் பரிசு, பானு முஷ்டாக்கிற்கும், அவரது புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தீபா பஸ்திக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தசரா துவக்க விழாவுக்கு, பானு முஷ்டாக்கிற்கு மட்டும் அழைப்பு விடுத்த முதல்வர் சித்தராமையா, தீபா பஸ்திக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? தசரா என்பது மத மரபுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி. முதல்வர் சித்தராமையா, திப்பு சுல்தான் மனநிலை கொண்டவர். எனவே தான் பானு முஷ்டாக்கிற்கு மட்டும் அழைப்பு விடுத்து உள்ளார். முஸ்லிம்கள் மத்தியில் சிலை வழிபாட்டுக்கு தடை உள்ளது. பானு முஷ்டாக் வழிபட்டால், அவரது சொந்த மதத்தினரே அவரை எதிர்ப்பர். அவரை அம்மதத்தில் இருந்து வெளியேற்றினால், அவர்கள் என்ன செய்வர்? ஹிந்துக்களை எதிர்க்கும் பானு முஷ்டாக், ஏன் சாமுண்டீஸ்வரியை வணங்க வேண்டும்? ஹிந்து மதத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கர்நாடக காங்., அரசு செயல்படுகிறது. இவ்வாறு கூறினர். மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''தசரா தேசிய பண்டிகை. மதம், ஜாதிகளுக்கு உட்பட்டது அல்ல. சர் மிர்சா இஸ்மாயில் மைசூரு திவானாக இருந்தபோது, தசரா கொண்டாடவில்லையா? ''இதில் எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது. அன்னை சாமுண்டீஸ்வரியை நம்புவதா, இல்லையா என்பதை துவக்கி வைப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார். மன்னர் குடும்பம் ஆதரவு தசரா விழாவை துவக்கி வைக்க, பானு முஷ்டாக்கை தேர்வு செய்த மாநில அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. முஸ்லிம் பெண்கள் சம உரிமை பெறவும், மசூதிக்கு செல்லும் வாய்ப்புக்காகவும் அவர் போராடி வருகிறார். கன்னட மொழி, இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அதை நாங்கள் மதிக்கிறோம். -யதுவீர், மைசூரு பா.ஜ., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kulandai kannan
ஆக 26, 2025 12:14

கேரள பாஜக ஸ்டிலின் வருகையை எதிர்த்தது போல் கர்நாடக பாஜகவும் இந்த விஷயத்தைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.


Ganapathy
ஆக 26, 2025 09:21

இஸ்லாமில் இருந்துகொண்டு ஒரு முஸ்லிம் எப்படி உருவ வழிபாடு செய்ய முடியும்? தஸரா ஒரு தேசிய பண்டிகையாக இருப்பதற்கு காரணம் தேசம் முழுதும் வியாபித்துள்ள ஹிந்துக்களின் மக்கள் தொகை. காங்கிரஸ்க்கு முஸ்லீம்களை ஏமாற்றி ஓட்டைப் பொறுக்க வேறு காரணம் கிடைக்கவில்லையா? அதற்க்கு எங்களின் தஸராவை பயன்படுத்துவது பெரும் கேவலம். ஹிந்துக்களை காங்கிரஸ் தொடர்ந்து அவமானமப்படுத்துகிறது.


Palanisamy Sekar
ஆக 26, 2025 09:04

தாராளமாக துவங்க வரட்டும் வரவேற்போம். ஆனால் அதற்கு முன்னர் நெற்றியில் திருநீறிட்டு குங்குமம் இட்டு, தலையில் பூ சூட்டி இந்துவாக இந்தியனாக அவர் வருவாரே என்றால் நிச்சயம் எந்த இந்து அமைப்பும் எதிர்க்காது. ஆனால் இதற்கு இந்த முஸ்லீம் பெண் ஒத்துக்குவாங்களா சொல்லுங்கள் பார்ப்போம். இந்த விழா இந்துக்களின் பாரம்பரிய விழா ஆகும் அதற்கு சிறுபான்மையினரின் ஒரு பெண் துவக்க வருவது அவமானம் அசிங்கம். அதனை அந்த பெண்ணும் உணரவேண்டும். உங்களின் அரசியலுக்கு இந்துமத நம்பிக்கையை தகர்க்க முயற்சிக்க கூடாது. இந்துக்கள் ஒருபோதும் அடுத்த மதத்தினரின் விழாக்களில் தலையீடு செய்வதே கிடையாது. ஏனெனில் இந்துக்கள் பிற மதத்தினரை மதிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் அதனையே குற்றமாக கருதி இப்படி தசரா திருவிழாவை துவக்க வந்துவிடாதீங்க


Barakat Ali
ஆக 26, 2025 08:10

இஸ்லாத்தைப் பொறுத்தவரை உருவ வழிபாடு செய்வது ஹராம் .. அதைத் துணிந்து இந்த அம்மாள் செய்கிறார் / ஊக்குவிக்கிறார் என்றால், அதை இஸ்லாமியர்களும் பொறுத்துக்கொள்கிறார்கள் என்றால் ஏதோ பெரிதாக ஒன்று நடக்கிறது ......


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 08:08

அங்கே 2028 சட்ட சபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேலையைத் துவக்கி விட்டது...


Rajan A
ஆக 26, 2025 11:06

என்னது 2028ஆ? அந்த ஊர் மக்கள் செய்த பாவம் இன்னும் 3 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமா?


GMM
ஆக 26, 2025 07:45

மைசூர் தசரா ஜெயின் சமூகம் துவக்கலாம். கிறித்துவ, முஸ்லீம் சமூக மக்கள் வழிபாட்டு, வாழ்க்கை முறை மாறுபடுவதால் துவக்குவது நன்று அல்ல. மேலும் இவ்விரு மதங்கள் அந்நிய மதங்கள். சட்ட தேர்வு முறை மாறுபடும். இந்து சமூக மரபு, தேர்வு நிலையானது. தெய்வத்தின் அருகில் மிகவும் கட்டுபாடு கொண்டு வாழ்வார் மட்டும் செல்ல வேண்டும். அரசியலுக்கு காங்கிரஸ் அழைத்தாலும், தன் மத கோட்பாடு படி முஸ்லீம் பெண் ஏற்க கூடாது.


Priyan Vadanad
ஆக 26, 2025 07:42

மத ஒற்றுமை என்று வந்துவிட்டாலே பாவக்காவுக்கு அடிவயிறு பத்திக்கிட்டு எரியுமே அருமையான இந்து சகோதர சகோதரிகளையே ஜாதியை உருவாக்கி பிரித்து வைத்து விட்டார்கள் பாவிகள். அதுசரி பிரிவினையை மூலதனமாக போட்டு வளரும் கட்சியல்லவா?


vivek
ஆக 26, 2025 08:22

நீ ஏன் அங்கே மூக்கை நுழைகிறார்


Mettai* Tamil
ஆக 26, 2025 10:12

அந்த மத ஒற்றுமையை ரம்ஜான் பண்டிகை திறப்புவிழாவுக்கு ஒரு ஹிந்துவை அழைத்து காட்டலாமே ....


Vasan
ஆக 26, 2025 07:12

When Hindu politicians can go and inaugurate Ramzan Nonbu, why not the other way?


Rajan A
ஆக 26, 2025 06:09

இன்னும் என்னென்ன செய்ய போகிறார்களோ? மதத்தை வைத்து அரசியல் பண்ணும் இவர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான் இருக்கும். கான் கட்சி காணாமல் போகும் வேளை வந்து விட்டது


சிட்டுக்குருவி
ஆக 26, 2025 05:51

இந்துக்களிடையே ஒரு தவறான கருத்து உள்ளது .சரியான புரிந்துணர்வு இல்லாமை .உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மதங்களில் மதம் மாற்றம் முறை உள்ளது .அது இந்துமதத்தில் இல்லை ?ஏன் என்றால் இந்துமத சடங்குகளை முறைப்படி பின்பற்றி யாரெல்ல்லாம் இந்துக்கோயிலுக்கு சென்று கடவுளை கைகூப்பி வணங்ககுகின்றார்களோ அவர்கள் எல்லாம் இந்துக்களே .இதை அறியாதவர்கள்தான் கோயிலுக்கு இவர் வரக்கூடாது ,அவர் வரக்கூடாது என்று பாகுப்பாடு காட்டுகின்றார்கள் .கடவுளுக்கு மக்களிடையே பாகுபாடுகிடையாது .இதை அறிந்துகொளவது அவசியம் .யார்வேண்டுமானாலும் கோயிலுக்கு சடங்குகளை பின்பற்றி வரலாம் .இதை எல்லோரும் அறிந்துகொளவது அவசியம் .


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 27, 2025 05:19

ஐயய்யோ, உங்க கருத்துப்படி நடந்தா சண்டையே போடமுடியாதே?


முக்கிய வீடியோ