உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாளில் அடித்தது அதிர்ஷ்டம்; லாட்டரியில் ரூ.12 கோடியை சொந்தமாக்கிய பால்பண்ணை ஊழியர் தினேஷ்!

ஒரே நாளில் அடித்தது அதிர்ஷ்டம்; லாட்டரியில் ரூ.12 கோடியை சொந்தமாக்கிய பால்பண்ணை ஊழியர் தினேஷ்!

திருவனந்தபுரம்: கேரளா அரசின் லாட்டரியில் பால்பண்ணை ஊழியரான தினேஷ் குமாருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு அதிபரானார். கேரளா லாட்டரி துறை பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை டிசம்பர் 4ம் தேதி அறிவித்தது. முதல் பரிசை வென்ற லாட்டரி டிக்கெட், கொல்லம் ஏஜென்சியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. முதல் பரிசான 12 கோடி ரூபாய் JC 325526 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி டிக்கெட்டை கொல்லம், கருநாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வாங்கி இருந்தார். ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு அதிபரானார். இவர் பால்பண்ணையில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது, பணக்காரர் ஆகி உள்ளார்.2019ல் தினேஷ் குமார் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் இரண்டு அல்லது மூன்று எண்களில் 12 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை தவறவிட்டார். தற்போது, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.12 கோடி ரூபாயை தட்டி தூக்கி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இதற்கு முன்பு லாட்டரியில் சிறிய தொகையை வென்றுள்ளேன்.பம்பர் லாட்டரி சீட்டுகளை தான் வழக்கமாக கொண்டு இருந்தேன். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தனக்கு எப்போதும் இருந்தது. தனது வாழ்க்கையை எப்போதும் போலவே வாழ விரும்புகிறேன். டிக்கெட் வாங்குவதன் மூலம் மட்டுமே ஒரு லாட்டரியை வெல்ல முடியும். டிக்கெட்டுகளை தொடர்ச்சியாக வாங்காமல் வெற்றி பெறவில்லை என்று குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகளை வாங்குவது கூட அதிர்ஷ்டத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Senthoora
டிச 08, 2024 05:50

இதெல்லாம் சேதியாக சொல்லி பெருமை படக்கூடாது. இதனால் உங்கள் உறவுகளுக்குள் பகை, உங்கள்ளுக்கும், உங்க குடும்பத்தாருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சம்பவங்களை எதிர் காலத்தில் நீங்கள் நோக்கலாம். கடவுள் துணை. மேல் நாடுகளில் இப்படி பெரும்பாலானவர்கள் சொல்ல மாட்டார்கள். சிலர் மாகாணம்விட்டு, மாகாணம் இடம் பெயர்ந்துவிடுவார்கள்.


சமீபத்திய செய்தி