உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்

லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்

ஹாசன் : இம்முறை லோக்சபா தேர்தலில், நான் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, என ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா அறிவித்தார்.ஹாசன், பேலுாரில் ம.ஜ.த., தொண்டர்கள் கூட்டத்தில், நேற்று அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடும்படி, சிலர் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால் நான் போட்டியிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு பதிலாக ஒரு இளைஞனை வெற்றி பெற வையுங்கள்.சக்கர நாற்காலியில் வந்து, சென்னகேசவரை தரிசனம் செய்தேன். இம்முறை லோக்சபா தேர்தல், மாறுபட்டதாக இருக்கும். என் பேரனை வெற்றி பெற வையுங்கள் என, கேட்க நான் வரவில்லை. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக வந்துள்ளேன். தேவகவுடா பிள்ளைகள், யாருக்கும் அநியாயம் செய்ததில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி