உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா ராகுல்?

எதிர்க்கட்சி தலைவர் ஆகிறாரா ராகுல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என அக்கட்சி கூறியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ‛ இண்டியா ' கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தனித்து 99 இடங்கள் கிடைத்துள்ளது. ஆட்சியில் அமர்வதற்கு தேவையான இடங்கள் கிடைக்காததால், எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dp90xyv2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என காங்கிரசில் கோரிக்கை எழுந்துள்ளது. பல எம்.பி.,க்கள் இது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர். காங்கிரஸ் கட்சியும், ராகுலே எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.விரைவில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தெளிவாக தெரியவரும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

MADHAVA NANDAN
ஜூன் 07, 2024 09:41

150 ஆண்டுகால கட்சியில் இவரைவிடவும் அறிவில் மூத்தவர்கள் யாரும் வளர அனுமதிக்கப்படவில்லையா ?


Shreyas
ஜூன் 06, 2024 18:47

பத்து வருட ஆட்சிக்குப் பின்னர் மைனாரிட்டி அரசு - இதுவும் வெட்கக்கேடு தானே.


Kumar Kumzi
ஜூன் 06, 2024 16:36

அப்பிடினா இனி பாங்காக் இன்ப சுற்றுலா போக முடியாதா


Jai
ஜூன் 06, 2024 15:52

45 இடங்கள் 52 இடங்கள் இன்று இருந்த காங்கிரஸ் கட்சி வளர்ந்து 330 இடங்களில் போட்டியிட்டு 99 இடங்களில் 30% வெற்றி மட்டுமே பெற்று எதிர்க்கட்சியாக களம் இறங்குவதற்கு வாழ்த்துக்கள் . பார்லிமென்ட் நடக்கும் காலத்தில் வெளிநாடு டூர் செல்லாமல் பார்லிமென்ட் சென்று மக்களுக்காக உருப்படியான கேள்விகளை கேளுங்கள்.


theruvasaga
ஜூன் 06, 2024 15:40

அப்படின்னா மறுபடியும் கண்டபடி கண்ணடிடா தானா.


Rengaraj
ஜூன் 06, 2024 15:13

தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தெரிந்தும் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை புரியாமல் இருக்கும் ஏழை வாக்காளர்களை மயக்கும் வகையில் , பெண்களுக்கு வருடத்துக்கு ஒரு லட்சம் தருவதாக பொய் பேசி, வேலை இல்லாத அனைத்து இளைஞர்களுக்கும் மாதம் ஆயிரக்கணக்கில் உதவித்தொகை என்று வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக அள்ளி வீசி , தனிப்பட்ட முறையில் பிரதமரை வார்த்தைகளால் திட்டி கேவலமான முறையில் அரசியல் செய்து , கூட்டணி கட்சிகளின் தயவில் வோட்டு வாங்கி தங்களின் தனிப்பட்ட வோட்டு வங்கியையும் பெருமையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கும் காங்கிரஸ் எதிர் கட்சி வரிசையில் அமர்வதற்கு இவர் போன்ற தலைவர் அவசியம் தேவைதானா. ?


Santhakumar Srinivasalu
ஜூன் 06, 2024 14:15

அவர் மக்களவை தலைவரா தான் நடக்கும். மக்கள் பிரச்சனை பற்றி விவாதம் நடக்காது!


Barakat Ali
ஜூன் 06, 2024 14:10

இந்திய வரலாற்றில் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று உங்களைத் தமிழக மீடியாக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் ..


GMM
ஜூன் 06, 2024 13:42

41 கட்சி MP. வென்றால், பிரதிநிதிகள் அதிகம் உள்ள கட்சிக்கு பிரதமர், தோற்றால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி என்று கூட முடிவு செய்ய பயம். நீங்கள் கூடியதே பிஜேபி வென்று அரசியல் ஊழல் தடுப்பு செய்தால் ஒன்றுபட்டு போராட தான். வேறு சிந்தனை இட ஒதுக்கீடு, இலவசம், சாசனம் காக்க புதிய மசோதாவை நிறுத்துவது... போன்ற நல திட்டங்கள். பிஜேபிக்கு அரசியல் தெரிந்த அளவிற்கு நிர்வாகம் புரியவில்லை.? புதிய பாராளுமன்ற தலை எழுத்து, ஒரே கூச்சலாக இருக்கும். ராகுல் ஏற்க்க மாட்டார்.?


Ramanujadasan
ஜூன் 06, 2024 13:28

எதிர் கட்சி தலைவர் ஆனால் என்ன? எந்த ஒரு மாநிலத்துக்கும் முதல்வர் ஆனால் தான் என்ன? பப்புக்கள் பப்புக்களே. தங்களின் முன்னோர்களினால் பதவி பெறுவது பெருமையல்ல


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி