உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூறாவளி பாதிப்பில் சிக்கிய ஜமைக்கா, கியூபா; மீண்டு வர உதவிக்கரம் நீட்டியது இந்தியா

சூறாவளி பாதிப்பில் சிக்கிய ஜமைக்கா, கியூபா; மீண்டு வர உதவிக்கரம் நீட்டியது இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மெலிசா சூறாவளிக்கு பிறகு இந்தியா அளித்த ஆதரவுக்கு ஜமைக்கா, கியூபா நாடுகள் நன்றி தெரிவித்துள்ளன.மெலிசா சூறாவளி காரணமாக ஜமைக்கா, கியூபா ஆகிய நாடுகள் முழுவதும், இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அதிகமான பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது.கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடலைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான மெலிசா சூறாவளியால், ஜமைக்கா, கியூபா நாடுகள் கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களால் போராடி வருகின்றன. இந்த புயல் காரணமாக, 75 பேர் உயிரிழந்தனர் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. மெலிசா சூறாவளி கரீபியனை புரட்டிப் போட்ட பிறகு, கியூபா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகள் தங்களுக்கு உதவிகள் செய்து ஆதரவளித்ததுக்கு, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இரு நாடுகளின் தலைவர்களும் வெளியுறவு அமைச்சகங்களும் இந்தியாவின் மருந்து உபகரணங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை எடுத்துரைத்துள்ளது. இந்த உதவி சரியான நேரத்தில் கிடைத்தது மிகவும் மதிப்புமிக்கது என்று ஜமைக்கா, கியூபா நாட்டு தலைவர்கள் பாராட்டி உள்ளனர். ஜமைக்காவின் வெளியுறவு அமைச்சர் கமினா ஜான்சன் ஸ்மித் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:''மெலிசா சூறாவளியைத் தொடர்ந்து மீட்பு முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக, ஜமைக்கா, இந்திய அரசிடமிருந்து மனிதாபிமான நிவாரண உதவியைப் பெற்றுள்ளது. நன்கொடைகளுக்கு இந்திய அரசுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்'', என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி