உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்படி அமைச்சராக தொடர்கிறார் செந்தில் பாலாஜி; மீண்டும் கேட்டது சுப்ரீம் கோர்ட்!

எப்படி அமைச்சராக தொடர்கிறார் செந்தில் பாலாஜி; மீண்டும் கேட்டது சுப்ரீம் கோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஜாமின் பெற்ற மறுநாளே அமைச்சராகி உள்ளீர்கள். இதன்மூலம், இந்த வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாகாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறை கோர்ட்டை நாடுவார்கள்,' எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடருகிறார்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக உரிய பதிலை வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. அமைச்சர் பதவி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், செந்தில் பாலாஜிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 79 )

vee srikanth
டிச 18, 2024 13:27

தம்பி என்ன ஆனார் கணம் கோர்ட்டார் அவர்களே


Mani . V
டிச 18, 2024 06:17

இதுக்கு பதில் சொல்வோம் என்று நம்பும் உங்களை நினைத்தால் சிரிப்பு, சிரிப்பாக வருகிறது.


Matt P
டிச 17, 2024 21:47

சட்டத்தை மாற்றாதவரை கொட்ட தான் முடியும். இல்லாவிட்டால் ஆளுகிற தலைவனுக்கு நல்ல எண்ணம்- மனம் வேண்டும். மக்கள் தான் முதலில் என்ற மன நிலை ஆளுகின்றவருக்கு வேண்டும்.


K Raveendiran Nair
டிச 15, 2024 15:38

நீதிமன்றங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும்


xyzabc
டிச 15, 2024 13:56

இது போன்ற விஷயங்களில் ஸ்டாலின் கெட்டிக்கறார். அவசர அவசரமாக வேலையை முடித்து விட்டார். திருடர்களை எதற்கு ஜாமினில் விடணும் ?


Jaya Ram
டிச 14, 2024 12:26

இதெல்லாம் அவர்களுக்கு தூசு மாதிரி முதலமைச்சரின் அதிகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது என்பார்கள்


Devanand Louis
டிச 14, 2024 10:00

எப்படி அமைச்சராக தொடர்கிறார் செந்தில் பாலாஜி - எல்லாம் பணம்தான் , 10 ரூபாய் பாலாஜி திராவிட மாடல் அரசுக்கும் குடும்ப அமைச்சர்களுக்கும் மருமகனுக்கும் கட்டிய பெரியத்தொகை கப்பம்தான் இவருக்கு அமைச்சர் பதவி


Nandakumar
டிச 14, 2024 07:45

எப்படி ஆனார் எப்படி ஆனார் என்று கேட்டால்? கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைத்து ஆனார். ஒன்று அவரை விலகச்சொல்லவேண்டும் அல்லது இருக்க சொல்லவேண்டும் அதை விட்டுவிட்டு விசாரணையை எத்தனை முறை தள்ளி வைப்பீர்கள்?


PARTHASARATHI J S
டிச 14, 2024 06:42

திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கட்கு அரசியல் சட்டம் மற்றும் நீதிபதிகள் தீர்ப்புகளை படிப்பதே இல்லை. படித்தால்தானே புரியும். பெயிலில் வந்தாலேயே கேஸ் முடிஞ்சிடுச்சு என்ற ஆழ்ந்த புரிதல். பதவி வெறியர்கள். ரொம்பவும் விவாதித்தால் திமுக வழக்கறிஞர்கள் சொல்வது. அரசியல் சட்டத்தில் பதவி ஏற்கக்கூடாது என தெளிவாக சொல்லவில்லை என்று குதர்க்கமாக பேசுவார்கள். தார்மீகம் தெரியாத அரசியல் கட்சி. பத்து வருடமாக எதிர்கட்சி. காய்ந்து போய் உள்ளனர். வேட்டை வெறிநாய் போல ஊழல் பண்ண காத்திருப்பு. நீதிமன்றங்கள் உடனடியாக தீர்ப்பு வழங்குவதில்லை. முதலில் சிஸ்டத்தை மாத்தனும்.


Dharmavaan
டிச 14, 2024 06:20

எல்லாவற்றுக்கும் காரணம் கேவலமான நீதித்துறை .வழக்கை சீக்கிரம் முடிப்பதில்லை.இந்திரா காந்தி போல் இருக்க வேண்டும் கொலீஜியும் நீக்கப்பட வேண்டும்


சமீபத்திய செய்தி