உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் நம் நாட்டு ராணுவத்தின் வடக்கு படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், உதம்பூரில் செயல்படும் நம் ராணுவத்தின் வடக்கு படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாக்., ஆதரவு சமூகவலைதளங்களில் தகவல் பரவின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fzsvt9zs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செய்தி தொடர்பு நிறுவனமான பி.ஐ.பி., மறுத்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இது முன்பே திட்டமிடப்பட்டது. இவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் ஷர்மா புதிய வடக்கு ராணுவ கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த செய்தியை பல பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் திரித்து உள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஆதாரங்களை மட்டுமே மக்கள் நம்பும் படி வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பாமரன்
மே 01, 2025 10:22

அது சரி கோவாலு... நாமதான் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பண்ணி பாக் மீடியா மற்றும் சமூக வலைத்தளங்கள முடக்கினோமே ... அப்புறம் எப்படி சனங்க பாக்குறாங்க...??? மக்கள் தொகைப் பற்றி அரிப்பை... சாரி அறிக்கை தர ஐடி அமிச்சரு பிஸியா இருப்பதால் நீர்வளத்துறை அமிச்சரு விளக்கம் சொல்லனும்னு கேட்டுக்கறேன் சாமியோவ்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 01, 2025 22:28

பாக்கிஸ்தானின் சமூக வலைத்தளங்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து முடக்கியது இந்தியாவில் தான் அர(ச்ச)வாணியே.....அந்த வலைதளங்களை பார்வையிட இந்திய ராணுவத்திற்கு ஸ்பெஷல் விதிவிலக்கு இருக்குன்னு படித்தவர்களுக்கு தெரியும்..... பாமரனுக்கு தெரிய வாய்ப்பில்லை.....தவிர சில அல்லது சில்லுகளுக்கு புரியவைக்க நீர்வளத்துறை அமைச்சர் எதுக்கு..... நாங்களே லெப்ட்ல டீல் பன்னுவோம்....,!!!


பாமரன்
மே 01, 2025 10:08

முதலில் தூக்கி அடிக்க வேண்டிய ஆள் அஜித் தோவல்... ஆலோசகர் என்பது வரும் முன் காக்க யோசனை சொல்றதுக்கு தான்... இவர் வந்ததில் இருந்து எல்லாமே வந்தபின் மியாவ் மியாவ் தான் நடக்கிறது... உடைஞ்ச மூக்கை மறைச்சு மியாவ் மியாவ்ன்னு கத்தறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...??? மேலும் பாக் சொனானதா கிளப்பி விடும் வேலையை செய்யும் முன் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் உள்பகுதியில் நடந்த ஒரு தாக்குதலுக்கு ராணுவம் எப்படி பொறுப்பு ஆகும்னும் வாயில் ரொம்பி இருக்கும் பகோடாவை துப்பிட்டு யோசிக்கனும்... அவனுவளுக்கு அறிவில்லையா அல்லது நம்ம ஐடி விங் பவிஷு இவ்ளோ தானா.. (போன தபா மாதிரி அந்த கடைசி மூன்று வார்த்தைகள் மட்டுமே வெளிவரும்... பார்ப்போம்)


Murugesan
மே 01, 2025 11:18

இந்த மாதிரியான கருத்துக்களை பதிவு திராவிட அயோக்கியனுங்க ...


Suppan
மே 01, 2025 13:08

என்ன ஒரு அறிவிலித்தனமான பதிவு? ஆனானப்பட்ட இஸ்ரேலின் உளவமைப்பே அக்டோபர் 2023 தாக்குதலை கணிக்கத் தவறிவிட்டது. கஷ்மீரின் சுற்றுலாத்துறை பல நாட்கள் முன்னமேயே தாக்குதல் நடந்த பகுதியை பயணிகளுக்கு திறந்து விட்டது. இந்தத்தகவலை காவல்துறை, ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் செய்தி வந்தது. நடந்தது சொல்லொணாத வேதனைக்குரியது .


sundarsvpr
மே 01, 2025 08:32

அரசு அலுவலங்களில் மூன்று ஆண்டுகாலம் ஒரு பதவியில் ஒரு ஊரில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்று விதி உள்ளது. நிர்வாக வசதி என்று காரணம் காட்டி மாற்றுவார்கள். இதனை சரிவர செயல்படுத்துவதில்லை இந்த விதி அமைச்சர்களுக்கும் பொருந்தும் இவர்கள் அரசு பணத்தை சம்பளம் படியாக பெறுகிறார்கள். ஏன் இவர்கள் போர்ட்போலியோ மாற்றம் செய்யப்படுவதில்லை.?


SVR
மே 01, 2025 10:38

திரு சுந்தர் எஸ் வி பி ஆர் அவர்களே, அமைச்சர்கள் ஒரு பதவி ஓய்வு பெறும் வரை வேலை செய்ய கூடிய நிரந்தரமான வேலையில் இருப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிப்பந்திகளுக்கு உண்டான விதி முறைகள் பொருந்தாது. ஒரு அமைச்சர் சரியாக வேலை செய்கிறாரா இல்லையா என்று மக்கள் கூற வேண்டும். அதை பொறுத்து அவர்களின் இலாக்கா மாற்றம் அல்லது பதவிப்பறிப்பு நடைபெறும். ஏன் என்றால் அவர்களின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ அல்லது எம்பி பதவி காலம் நிரந்தரமானது அல்ல. மக்களால் நேரடியாகத் தேர்வு செய்ய படுபவர்கள். அவர்கள் தான் விதி முறைகளை செய்பவர்கள். அவை அவர்களுக்கு பொருந்தாது. உங்களுக்கு ஒரு அமைச்சரின் செயல்பாடு சரியில்லை என்று தோன்றினால் காரணங்களுடன் பிரதமருக்கு அல்லது முதல்வருக்கு தெரிவியுங்கள். ஒரு கால் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளலாம்.


Kasimani Baskaran
மே 01, 2025 08:12

காங்கிரஸ் கோஷ்டி இதை ஒரு பிரச்சினையாக கிளப்பும் என்று எதிர்பார்த்தேன்...


RAMAKRISHNAN NATESAN
மே 01, 2025 08:01

இது போல இன்னும் வருங்காலங்களில் அதிகம் செய்வார்கள் ..... இதற்கு கன்சல்ட்டிங் துருக்கி ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை