உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சில் மாணவர்கள் பயணம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

பஸ்சில் மாணவர்கள் பயணம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?

பெங்களூரு: பஸ்சில் பயணம் செய்யும் மாணவ - மாணவியரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, போக்குவரத்துத் துறையை கே.எஸ்.சி.பி.சி.ஆர்., எனும் கர்நாடக மாநில குழந்தைகள் நல ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.கர்நாடகாவில் பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவ - மாணவியர் பெரும்பாலும் பஸ்சில் பயணம் செய்கின்றனர். அப்போது பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் வராதது, பஸ்கள் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகளால் மாணவர்கள் பெரும் தொந்தரவுக்கு ஆளாகினர்.பயணத்தின்போது, சில மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மாணவியர் உடல் ரீதியாக பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் உடல், மன ரீதியில் அவர்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர். மாநிலம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளன.இதற்கு தீர்வு காணும் வகையில், மாணவர்கள் நலன் சார்ந்த போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்கக்கோரி, போக்குவரத்துத் துறையிடம் கே.எஸ்.சி.பி.சி.ஆர்., வலியுறுத்தியது.கே.எஸ்.சி.பி.சி.ஆர்., தலைவர் நாகண்ணா கவுடா கூறுகையில், ''மாணவர்கள் பயணம் செய்வது குறித்து போக்குவரத்துத் துறைக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. போக்குவரத்துத் துறை ஊழியர்களிடம் 'போக்சோ' சட்டம், மாணவர்களை வழிநடத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு, மாணவர் நலன் சார்ந்த போக்குவரத்தை அமைக்க வேண்டும். சமீப காலமாக, தொட்டப்பல்லாபூரில் உள்ள மாணவர்கள் பஸ்கள் இன்றி தவித்து வருகின்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.ஹாவேரி ஹன்கல் தாலுகா, குசனுார் கிராமத்தில், பஸ்சில் பயணம் செய்த 14 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு வேண்டும். போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு, மாணவர்களை எப்படி நடத்துவது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்ஆனந்த் அஸ்வத்,சமூக ஆர்வலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை