உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்தில் இடஒதுக்கீடு கோருவதா? ராகுலுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி

ராணுவத்தில் இடஒதுக்கீடு கோருவதா? ராகுலுக்கு ராஜ்நாத் சிங் பதிலடி

பாட்னா: ''ஆயுதப் படைகளில் இட ஒதுக்கீடு கோருவதன் மூலம், நாட்டில் அராஜகத்தை கட்டவிழத்துவிட ராகுல் முயற்சிக்கிறார்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலையொட்டி, அவுரங்காபாதில் சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், 'நாட்டின் மொத்த மக்கள் தொகையில் உயர் ஜாதியினர், 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 90 சதவீத தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை' என, குற்றஞ்சாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yp5a46v6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ள, பீஹாரின் ஜமுய் மாவட்டத்தில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ராகுலுக்கு என்ன ஆயிற்று? ஆயுதப் படை களில் இட ஒதுக்கீடு பற்றி ஏன் அவர் கேள்வி எழுப்புகிறார்? இதன் மூலம் நாட்டில் அராஜகத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். ரா ணுவத்துக்கு ஒரேயொரு மதம் தான் உள்ளது. அது, ராணுவ மதம். ஆயுதப் படைகளை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். நாட் டை வழிநடத்துவது என்பது, குழந்தைகளுக்கான விளை யாட்டு அல்ல என்பதை ராகுல் அறிய வேண்டும். தேர்தல் கமிஷன் போன்ற அரசியலமைப்பு அமைப்புகள் மீது, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்தபடி குற்றஞ்சாட்டுகிறார். காங்., தோல்வி அடையும் என்பது அவருக்கு தெரியும். அதை ஏற்க முடியாமல் தான், இது போல அவர் பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Madras Madra
நவ 06, 2025 13:52

ராகுல் அடுத்த முறையும் தோற்பார் தோற்று விட்டு இன்னும் குழம்பி வாய்க்கு வந்ததை ......


எஸ் எஸ்
நவ 06, 2025 12:55

இங்கே சில அறிவாளிகள் ராணுவ பணிகளில் உயர் சாதியினர் சேருவதே இல்லை என்று பிரச்சாரம் செய்கின்றனர் என்பது ராகுலுக்கு தெரியுமா?


jayaram
நவ 06, 2025 12:15

முதலில் உங்களது கட்சியில் இருந்து ஆரம்பிக்கலாமே ஏன் ஊருக்கு உபதேசம்?


jayaram
நவ 06, 2025 12:12

ஏன் சுடுகாட்டில் கேட்கவில்லை? விட்டால் இதற்கும் கேட்பீர்கள் போல் இருக்கிறது.


V RAMASWAMY
நவ 06, 2025 08:42

அரை வேக்காடுகள் அழிவுக்கு அஸ்திவாரம் போடுகின்றன.


VENKATASUBRAMANIAN
நவ 06, 2025 08:00

இதுமாதிரி எழுதிக்கொடுத்து ராகுலை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். ராகுல் கவனமாக இல்லாமல் இப்படியே பேசிக்கொண்டு போனால் மக்கள் இவரை புறக்கணித்து விடுவார்கள்.


Sudha
நவ 06, 2025 07:26

உள்ளே போட்டால், சிறைக்குள்ளே இட ஒதுக்கீடு கேட்பார் போல


வாய்மையே வெல்லும்
நவ 06, 2025 10:03

நல்ல முயற்சி.


ஆரூர் ரங்
நவ 06, 2025 06:58

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை ராஜிவ் கடுமையாக எதிர்த்தார். இந்திரா கிடப்பில் போட்டார்.


சமீபத்திய செய்தி