உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பு வாபஸ்

பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பு வாபஸ்

புதுடில்லி:வாகன நிறுத்தக் கட்டணத்தை இரட்டிப்பாக்கும் உத்தரவை, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் திரும்பப் பெற்றுக் கொண்டது.தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, புதுடில்லி முனிசிபல் கவுன்சிலின் வாகன நிறுத்துமிடங்களில், கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டது.அந்த நேரத்தில், டில்லியில் இருந்த 'கிரேடட் ஆக் ஷன் ரெஸ்பான்ஸ் பிளான்' வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.ஆனால், பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக வெளியிடப்பட்ட பொது அறிவிப்பை, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் நேற்று முன்தினம், திரும்ப பெற்றுக் கொண்டது.தலைநகர் டில்லியில், புதுடில்லி முனிசிபல் கவுன்சில் 91 இடங்களில் பார்க்கிங் தளங்கள் அமைத்துள்ளன. இவற்றில் 41 தளங்களை முனிசிபல் கவுன்சில் நிர்வகிக்கிறது. மற்ற தளங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ