உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

தங்கச்சங்கிலி திருட்டு: விமான பணிப்பெண் மீது பெண் பயணி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: தனது குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை, விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.பிரியங்கா முகர்ஜி என்ற பெண், சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரண்டு குழந்தைகளுடன் பயணித்து உள்ளார். இவர் பெங்களூரு போலீசில், தனது குழந்தையை கழிவறைக்கு அதிதி அஸ்வினி சர்மா என்ற பணிப்பெண் அழைத்துச் சென்றார். திரும்பிவந்த போது, கழுத்தில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பு உள்ள 20 கிராம் தங்கச்சங்கிலியை அதிதி அஸ்வினி சர்மா திருடிவிட்டதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமான பணிப்பெண் மீது பெண் பயணி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக அறிந்துள்ளோம். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KRISHNAN R
ஏப் 06, 2025 08:27

வெஸ்ட் பெங்கால் கோஷ்டி... உண்மை தெரிய வேண்டும். அஜாக்கிரதை.. யா என்றும் பார்க்க வேண்டும்


Kasimani Baskaran
ஏப் 06, 2025 07:47

ஒன்றும் ஆகாது.


shakini
ஏப் 06, 2025 05:21

if this complaint true severe action must be taken against air hostess


நிக்கோல்தாம்சன்
ஏப் 06, 2025 05:13

முகர்ஜி குழந்தையை நீ அழைத்து செல்லவேண்டுமா இல்லை விமான ஊழியரிடம் அனுப்பி வைத்து விட்டு பின்னர் அவர்களை குறை கூறுவதா ?


முக்கிய வீடியோ