மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி: உறவினர்கள் மறியல்
27-Dec-2024
வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் அங்கு உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் என்ற காபி தோட்டத்தில் தொழிலாளராக பணிபுரிந்தார்.நேற்று காலை இவர் காபி இலைகளை பறிக்கச் சென்றபோது, தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி ராதாவை தாக்கியது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் வரை, உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் குவிக்கப்பட்டனர். மாநில எஸ்.சி., - எஸ்.டி., அமைச்சர் கிராமத்தினரை சந்தித்து சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அவர்களின் கோரிக்கையை ஏற்று புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க அரசு உத்தரவு பெற்று தந்தார். மேலும், வனவிலங்கு - மனித மோதலை தடுக்க அப்பகுதியில் வேலி அமைக்கப்படும் என்றார். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப கிராம மக்கள் அனுமதித்தனர்.
27-Dec-2024