உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ் ஸ்டாண்டில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்

பஸ் ஸ்டாண்டில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் தவிக்க விட்டு, 'இன்ஸ்டாகிராம்' காதலனுடன் தாய் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியைச் சேர்ந்த பெண் பிரவீனா. இவருக்கு திருமணமாகி தனுஷ் என்ற 15 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்த பிரவீனா அடிக்கடி, 'மொபைல் போன்' வாயிலாக சமூக வலை தளங்களில் மூழ்கியுள்ளார். இதில், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகம் வாயிலாக இளைஞர் ஒருவர் பிரவீனாவுக்கு அறிமுகமானார். அவருடன் தொடர்பு ஏற்பட்டதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இந்நிலையில், கள்ளக்காதலுக்கு கணவனும் குழந்தையும் தடையாக இருப்பதாக உணர்ந்த பிரவீனா, கள்ளக்காதலனுடன் ஓட திட்டமிட்டார். இதையடுத்து குழந்தையுடன் நலகொண்டா பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பிரவீனா, குழந்தைக்கு தின்பண்டம் வாங்கி கொடுத்து, அங்குள்ள இருக்கையில் அமர வைத்தார். பின்னர் பைக்கில் வந்த தன் காதலனுடன் பிரவீனா தப்பி சென்றார். பஸ் ஸ்டாண்டில் இருந்த குழந்தை தாயை காணாததால் கதறி அழுதது. போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிரவீனா பைக்கில் வந்த நபருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த ஜோடியை பிடித்த போலீசார், பிரவீனாவுக்கும், கணவருக்கும் கவுன்சலிங் நடத்தி பின் குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

மாறவர்மன் நெடுஞ்செழியன்
ஜூலை 31, 2025 22:05

இப்படி தான் அந்த பிரியாணி அபிராமிக்கும் போலீஸ் முதலில் கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது, பிறகு தான் அவள் ரெண்டு குழந்தைகளையும் கொன்னுட்டு கள்ள காதலனோடு ஓடினாள்


Sivak
ஜூலை 30, 2025 20:17

அவளுக்கு கவுன்சிலிங் குடுக்க கூடாது ? செருப்படி குடுத்து ஜெயிலில் களி திங்க வைக்கணும்


Vel1954 Palani
ஜூலை 30, 2025 15:29

என்ன சொல்வது .காலக்கொடுமை . வயது கோளாறு. நல்ல வேலை புருஷனுக்கும் புள்ளைக்கும் பாய்சன் போடாமல் விட்டாலே. போலீசார் சமரசம் சில காலம் மட்டுமே. விதி வலியது . யாரை விட்டது. ஓம் சிவாயா நமஹ


தத்வமசி
ஜூலை 30, 2025 14:38

இவள் தாயா ? தாயாக இருப்பதற்கு தகுதியற்றவள். அந்த வீடியோவைக் கொண்டேன். உண்மையில் மனம் வெடித்துப் போனது. அப்படி என்ன உடல் அரிப்பு ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 30, 2025 13:19

நல்ல வேலை இந்த பெண் திட்டமிட்டு கணவனையும் குழந்தையும் தமிழக மொழியில் முறை கேடான உறவுக்காக கொல்லாமல் விட்டாரே. அது வரை சந்தோஷம்.


ஆரூர் ரங்
ஜூலை 30, 2025 11:22

ஈரவெங்காய புத்தகப்படி கர்ப்பப்பையையும் அகற்றிவிட்டிருப்பாரோ? மணம் கடந்த உறவுகள் திராவிஷ கலாச்சாரத்தின் முக்கிய கோட்பாடா?..


Rathna
ஜூலை 30, 2025 11:13

ஒரு பக்கம் ஒரு தாய் தனது குழந்தையின் தீக்காயம் ஆற தனது தோலை தானமாக தருகிறாள். இன்னொரு பக்கம் ஒரு தனது அல்ப சுகத்திற்காக தனது வயிற்று பிறப்பின் உயிரையே அடமானம் வைக்கிறாள். என்ன கேவலம்?


கலி
ஜூலை 30, 2025 09:14

புகழ் தெலுங்கானா வரைக்கும் பரவின தருணம்!


D Natarajan
ஜூலை 30, 2025 07:53

அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுபவனை சுட்டுக் கொல்லவேண்டும்


sridhar
ஜூலை 30, 2025 09:34

அப்போ ' அந்த ' கட்சியே அழிஞ்சிடும் , பரவாயில்லையா ..


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 30, 2025 10:45

முதலில் எங்கள் திராவிடத் தமிழ் படியுங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 30, 2025 06:55

ஆஹாஹாஹா .. ஐயாவின் கனவு இப்போதுதான் நனவாகிறது ...


புதிய வீடியோ