மேலும் செய்திகள்
தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
05-Jun-2025
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, மருத்துவமனை ஊழியரே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில், இ.எஸ்.ஐ.சி., எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, ஐ.சி.யு., எனப்படும் அவசர சிகிச்சை பிரிவில், 32 வயது பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி சிகிச்சை பெற்று வந்தார்.அவரது குடும்பத்தினர் வார்டுக்கு வெளியே நின்றிருந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சிங் ஊழியர் அந்த பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டார். அவர் மயங்கிய உடன், அந்த படுக்கையை சுற்றி திரைசீலையால் மூடிய ஊழியர் அவரை பலாத்காரம் செய்தார்.அரை மயக்கத்தில் இருந்த அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர் பலாத்காரம் செய்தார். பட்டப்பகலில் மருத்துவமனை ஐ.சி.யு.,வில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் மழுப்பலாக பதில் அளித்ததுடன் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர், அதிகாரிகள் முன்னிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.இது குறித்து அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின்படி, மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
05-Jun-2025