உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றத்தை அவமதித்த பெண்ணுக்கு ஒரு வாரம் சிறை

நீதிமன்றத்தை அவமதித்த பெண்ணுக்கு ஒரு வாரம் சிறை

மும்பை நீதிமன்றத்தை அவமதித்து கருத்து தெரிவித்த பெண்ணுக்கு ஒரு வார சிறை தண்டனை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த லீலா வர்மா என்பவர், தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், தெருநாய்களுக்கு உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களுக்கும், லீலா வர்மாவுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த லீலா வர்மா, மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். அதில், தெருநாய்களுக்கு உணவளிப்பதால், குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை ஜனவரியில் விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும். அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வினீதா ஸ்ரீநந்தன், மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயில் அனுப்பினார். அதில், நீதிமன்றம், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதாவது: நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kuru
ஏப் 24, 2025 10:49

தனக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா தக்காளி சட்னி. பெரிய குற்றங்கலுக்கொள்ளாம் தண்டனை சிரியதாக உள்ளதே அங்கே பணம் பதவி விளையாடுதோ.


சிந்தனை
ஏப் 24, 2025 09:49

குற்றம் செய்தவரை குற்றம் செய்யாதவர் என்றும் குற்றம் செய்யாதவரை குற்றம் செய்தவர் என்றும் வாதாடிய வக்கீலுக்கும் சமமான தண்டனையை கொடுக்க வேண்டும் நீதிபதியிடம் பொய் சொல்லும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தோன்றுகிறது


சிந்தனை
ஏப் 24, 2025 09:46

அப்படியே... தவறாக தீர்ப்பளித்த, லஞ்சம் வாங்கிய... நீதிபதிகளுக்கு என்ன என்பதையும் சொன்னால் பரவாயில்லை போல...


அப்பாவி
ஏப் 24, 2025 09:38

தெருநாய்களை அப்புறப்படுத்த ஒரு நீதிமன்றமும் முன்வராது. நமக்கெதுக்கு வம்பு. நீதிமன்ற அவமதிப்புன்னு உள்ளே வெச்சிருவாங்க.


Padmasridharan
ஏப் 24, 2025 09:31

சாதாரண மக்களை, மிருகங்களை விட கேவலமாக பேசி நடத்தும் காக்கி சட்டை போட்டு உலாத்துபவர்களுக்கும் இதே போன்று தண்டனைகள் கொடுத்தால், நாட்டில் மதிப்புற்குரிய மக்கள் உயர்வார்கள்


Kalyanaraman
ஏப் 24, 2025 07:55

பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் அதை ஏற்று அமல்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் மாநில அரசுகளுக்கு என்ன தண்டனையோ??? சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நீதிமன்றங்கள் இதன் மூலம் உறுதி செய்ய வேண்டும்.


Iniyan
ஏப் 24, 2025 07:35

நீதி மன்றங்கள் ஒரு தனி அராஜக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது


raja
ஏப் 24, 2025 07:13

ஆனா இதே நீதிமன்றம் ஒரு வக்கீலுக்கு நீதி மன்ற அவமதிப்பு க்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் ஒரே ஒரு ருவா அபராதம் விதித்தது....


pmsamy
ஏப் 24, 2025 06:50

பல பாஜகவினர் நீதிமன்றத்தை அவமதித்து ஊடகத்தில் செய்திகள் அனுப்புகின்றனர் இதற்கெல்லாம் நீதிமன்றம் ஏன் மௌனமாக இருக்கிறது பாஜகவின் மேல் நீதிமன்றத்திற்கு பயமா?


மீனவ நண்பன்
ஏப் 24, 2025 03:17

ரூபாய் நோட்டுகள் அரசாங்க சொத்து ..நீதியரசர் வீட்டில் அக்கினிபகவான் சொக்கப்பானை கொளுத்தியதற்கு இன்னமும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை