உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான கருத்துகளை அனுமதிக்க முடியாது: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான அவதூறு கருத்துகளை அனுமதிக்க முடியாது,'' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்து உள்ளது.கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிராவில், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டும் என்றே அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நிரிபேந்திர பாண்டே என்பவர் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் முறையீடு செய்தார். ஆனால், சம்மனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதனை எதிர்த்து ராகுல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=urzq2nsv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை விசாரித்த திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மன்மோகன் அமர்வு கூறியதாவது: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. இந்த முறை சாவர்க்கர், அடுத்த முறை மஹாத்மா காந்தி ஆங்கிலேயர்களின் ஊழியர் என்று யாராவது கூறுவார்கள். மஹாத்மா காந்தி கூட ஆங்கிலேயர்களை தொடர்பு கொண்ட போது, உங்களின் விசுவாசமான ஊழியர் என்ற குறிப்பிட்டது ராகுலுக்கு தெரியுமா? அவர்களை புகழ்ந்து, ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்த போது கடிதம் எழுதியது தெரியுமாசுதந்திர போராட்ட வீரர்கள் நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், நீங்கள் இப்படி செயல்படுகிறீர்கள். சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்து பொறுப்பு அற்றது. அவரை மஹாராஷ்டிரா மக்கள் போற்றுகிறார்கள். அவருக்கு எதிரான இழிவான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.அடுத்த முறை இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்பாட்டால், நாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்துவோம். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர். மேலும் ராகுலின் மனு குறித்து பதிலளிக்கும்படி உ.பி., அரசு மற்றும் நிரிபேந்திர பாண்டேவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

DHANASEKARAN DEVAN
ஏப் 26, 2025 07:41

அவர் பிரதமராக பதவியிலிருந்தவர்..... விமர்சனங்கள் தவிர்க்க இயலாது


அப்பாவி
ஏப் 25, 2025 22:05

நேருதான் நாட்டைக் கெடுத்தார்னு சொல்ற ஆளுங்களை ஒண்ணும் கேக்க மாட்டீங்களா எசமான்?


vivek
ஏப் 27, 2025 07:03

அது உண்மை தானே


தாமரை மலர்கிறது
ஏப் 25, 2025 19:52

குஜராத் கோர்ட்டில் முறையிட்டு இருந்தால், ரெண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்திருக்கும்.


R.Varadarajan
ஏப் 25, 2025 19:02

ராகுல் கானுன் இந்த பிதற்றலை ஏன் மராட்டிய கௌரவத்தை போற்றும் சிவசேனா செயலற்று இருக்கிறது ? பொங்கி எழவில்லையே?


Sundaran
ஏப் 25, 2025 18:56

பெரிய இடம் என்றால் நீதி வளைந்து கொடுக்கும் .இதுவே சாதாரண குடிமகன் என்றால் சிறை தண்டனை கொடுத்து இருப்பார்கள்.


Kasimani Baskaran
ஏப் 25, 2025 18:22

சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் வழிவந்த திராவிட வராகங்கள் கூட மிகக்கேவலமாக விமர்சிப்பது சாதாரணம். அடிப்படை அறிவு மழுங்கடிக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்டதுதான் அடிப்படை காரணம்.


B MAADHAVAN
ஏப் 25, 2025 17:43

வயது முதிர்ச்சியடையாத குழந்தைகளுக்கு, செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும்போது, பெரியவர்கள் சில கருணை காட்டுவார்கள். இந்த அரைவேக்காடு ஆளையும் அந்த ரகத்தில் சேர்த்து விட்டார்களோ என்னவோ. இந்த ஆள் எத்தனை தடவை தப்பு தப்பாக உளறி கொட்டி வேண்டுமென்றே தவறு செய்தாலும் குழந்தையாக பாவித்து மன்னித்து விடுகிறார்கள் . அதற்கு எல்லாம் குழந்தை முகராசி வேண்டும் போலும்.


Dharmavaan
ஏப் 25, 2025 18:41

மக்களை ஏமாற்ற போடும் நாடகம் ..


Rajan A
ஏப் 25, 2025 17:37

நல்லா நிதானமாக விசாரித்து தோழமை சுட்டு மாதிரி நல்ல அறிவுரை கூறியுள்ளது. பேஷ் பேஷ் நம்ம பப்பு அறிவுள்ள பிள்ளை


Loganathan Balakrishnan
ஏப் 25, 2025 16:37

சுதந்திர போராட்ட வீரர்கள் யாரு ஜெயிலில் செக்கு இழுத்தவர்களா அல்லது புத்தகம் எழுதியவர்களா


Dharmavaan
ஏப் 25, 2025 16:35

இவனுக்கு மட்டுமே ஏன் எல்லா வழக்குகளிலும் மென்மை நீதிகளின் செல்லப்பிள்ளையா அல்லது நீதியே பயப்படுகிறதா


சமீபத்திய செய்தி