உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வொர்க் பிரம் கார் : அபராதம் விதித்த போலீசார்

வொர்க் பிரம் கார் : அபராதம் விதித்த போலீசார்

பெங்களூரூ: வீட்டில் இருந்து வேலை பார்க்க சொன்னால் தற்போது வொர்க் பிரம் கார் என்ற லெவலுக்கு போய் விட்டது. கோவிட் காலத்தில் பெரிதும் உதவியது வீட்டிலிருந்தே பணி செய்யும் 'வொர்க் பிரம் ஹோம்' கான்செப்ட். இது இன்னும் சில நிறுவனங்களில் நீடிக்கத்தான் செய்கிறது. நிரந்தரமாகவே பலருக்கு வீட்டில் இருந்தபடி பணிகள் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்து உள்ளது. எங்கு சென்றாலும் ஒரு லேப்டாப் இருந்தால் அனைத்து பணிகளும் ஜரூராக நடக்கிறது. ரயில், பஸ், விமானம் என பலரும் பணிகளை ஆங்காங்கே பார்ப்பதை காண முடிகிறது. இந்நிலையில் பெங்களூருவில் ஆர்த்நகரில் ஒரு பெண், காரில் இருந்து பணி செய்தது (வொர்க் பிரம் கார்) சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவை ஆய்வு செய்த போக்குவரத்து போலீசார் கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் பணி செய்த பெண்ணை கண்டுபிடித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

naranam
பிப் 13, 2025 20:08

இந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.


Karthik
பிப் 13, 2025 18:11

அடே.. ங்கப்பா போலீஸு. ஆ....யிரம் ரூபா ஃபைனா..? பாவம் அந்த பெண்.. அடுத்த ஓராண்டுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்த போகுது..


Suppan
பிப் 13, 2025 16:07

பலர் "ரீட் பிரம் டாய்லெட்" பலகாலமாகவே செய்கிறார்கள்.


அப்பாவி
பிப் 13, 2025 15:29

அமெரிக்காவில் மிகவும் சகஜம். அங்கே வேணும்னா சிட்டிக்க்ய்ள்ளாற பார்க்கிங் செஞ்சுட்டு வேலை பாக்கலாம். இங்கே ஒண்டறதுக்கே இடமில்லை. காரில் கம்பியூட்டரை தொறந்து வெச்சாலே வேலை பாக்கறதா போலுஸ் காமெடி பண்ணும்.


v narayanan
பிப் 13, 2025 14:15

போன் பேசி க்கொண்டே வேலை பார்ப்பவர்கள் என்ன செய்வது ?


ஆரூர் ரங்
பிப் 13, 2025 14:05

சராசரி 1 கிமி வேடத்தில் மட்டுமே டிரைவ் செய்ய இயலும் பெங்களூருவில் சாப்பிட்டுக் கொண்டே கூட ஓட்டுகிறார்கள். போலீஸ் ஒருவழிப் பாதையில் செல்வது சர்வசாதாரணம்.


கத்தரிக்காய் வியாபாரி
பிப் 13, 2025 13:43

ஆயிரம் ரூபாய்? ஒருபக்கம் கோடிக்கணக்குல கொள்ளை, இன்னொரு பக்கம் அஞ்சு பத்துனு அபராதம். விளங்கிடும் நாடு.


தமிழன்
பிப் 13, 2025 13:38

கலிகாலம் முத்திவிட்டது அடுத்து ஒர்க் ப்ரம் டாய்லெட் என்று ஒன்று வரும் மனிதன் சீக்கிரம் அழிவை நோக்கி முன்னேறுகிறான்


என்றும் இந்தியன்
பிப் 13, 2025 16:46

ஏன்??? இப்போது வாலிப குழந்தைகள் டாய்லெட் செல்லும் போது மொபைல் கொண்டு போகாமல் செல்வதேயில்லையே, அந்த முத்திய கலிகாலம் வந்தாச்சே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை