உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யுங்க; டில்லி அரசு உத்தரவு

50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து வேலை செய்யுங்க; டில்லி அரசு உத்தரவு

புதுடில்லி: காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.டில்லியில் காற்று மாசு பிரச்னை நிலவி வருகிறது. இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காற்றின் தரம், அங்கு மிக மிக மோசமாக உள்ளது. டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவின் குருகிராம், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் போன்ற நகரங்களிலும், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர மேலும் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wnvv9nuv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து புகை மூட்டமாக இருப்பதால், டில்லியில், விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 119 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. 6 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லிக்கு 13 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தது. இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக, டில்லியில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மதியம் 1 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உத்தரவு அமலாகிறது என டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பாமரன்
நவ 20, 2024 13:11

சென்ற வாரம் டெல்லியில் நேரில் பார்த்தேன்... முழு NCR லும் பகலில் கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவில் உள்ளதை கூட பார்க்க முடியவில்லை..மிகவும் மோசமா சூழல்... கும்மிடிபூண்டியை தாண்டாமல் ஆனால் டில்லி பற்றி மாஞ்சு மாஞ்சு எழுதும் பக்கோடாஸ்க்கு சொல்லனும்னா போகி பண்டிகை அன்னிக்கு சைதாப்பேட்டை தெருவில் காலை ஏழு மணிக்கு பார்த்தீங்கன்னா எப்படி இருக்குமோ அதைவிட மோசம்.. வாகன புகை எங்கும் குப்பைகூளமாக வைத்திருப்பது மற்றும் அண்டை மாநிலங்களில் விளை நிலக்கழிவுகளை எரிப்பதால் எழும் புகை காற்றின் மூலம் வந்து டெல்லியை கிட்டத்தட்ட வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி வருகிறது... உபி ஹரியானா பஞ்சாப் சாலைகளில் நிலைமை இன்னும் மோசம்... வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எக்கச்சக்கமான விபத்துகள்... இந்த பகுதிகளை அடிக்கடி பார்த்து மற்றும் பாதித்து வருபவன் என்கிற முறையில் சொன்னால் இதற்கு தீர்வு காண வருடக்கணக்கில் ஆகலாம்.. பாதிப்புகள் கை மீறி போய்விட்டன.. அரசுகள் போர்க்கால அடிப்படையில் ஸ்திரமான நீண்டகால மாசு கட்டுப்பாடு திட்டங்களை உடனடியாக செயல்படுத்தினால் அசுரவேகத்தில் வளர்ந்துவரும் இந்த பகுதிகளை சற்றாவது மாற்றி வாழத்தகுதியுள்ளதாக மாற்ற முடியலாம்... அல்லது ஒவ்வொரு வருடமும் இந்த மூன்று மாதங்களுக்கு ... நாம வருடா வருடம் சொல்லும் வல்லரசாவோம் ஊழலை ஒழிப்போம் கருப்பு பணத்தை மீட்போம் ஒலிம்பிக்கை நடத்துவோம் மாதிரி மூக்கை சிந்திட்டு போயிகிட்டே இருக்க வேண்டியதுதான் ...


Karmegam,Sathamangalam
நவ 20, 2024 16:11

ஏலே பாமர பக்கோடா பஞ்சாப்லயும், டெல்லிலயும் யார் ஆட்சி நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு கருத்தை போடு இவரு பெரிய..... கும்மிடிப்பூண்டிய தாண்டிட்டாராம் நீ தாண்டுன லட்சணத்தை நீ போடுற கருத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். வன்டான் பெரிய யோக்கிய...மாதிரி புத்திமதி சொல்ல...


பாமரன்
நவ 20, 2024 18:49

என்ன எழுதியிருக்குன்னு படிச்சி புரிஞ்சிக்கிட்டு கருத்து போடு... நான் எந்த கட்சி அல்லது ஆட்சியையாவது தப்புன்னு சொன்னேனா...??? அபாயத்தில் இருக்கு ... நடவடிக்கை எடுக்கணும்னு தானே சொன்னேன்... படிங்க, நாலு எடத்தை பாருங்கன்னா, இங்கேயே குந்திக்கிட்டு பகோடா மிக்சர் சாப்பிட்டுக்கிட்டு இரு வெளங்கிடுவ டோமரு....


SUBBU,MADURAI
நவ 20, 2024 10:19

Delhi Pollution: 31st October 280 AQI (Air Quality Index) 18th November 999 AQI Pollution is due to stubble burning and not due to Diwali crackers. Those who blame Hindu festivals for pollution should get their brain examined by a good psychiatrist.


முக்கிய வீடியோ