உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டைஅருகே, தொளவேடு காலனியில் வசித்து வந்தவர் ஆனந்தராஜ், 45. கூலி தொழிலாளி. நேற்று மதியம், காக்கவாக்கம் பகுதியில் விவசாய நிலத்தில் இவருடன் சேர்ந்து, 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். மதியம், 1:00 மணிக்கு திடீரென மழை பெய்தது. தொடர்ந்து இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் காக்கவாக்கம் கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள ஒரு பம்பு செட்டில் தஞ்சமடைந்தனர்.மழை நின்ற பின் ஒருவர் பின் ஒருவராக வீட்டிற்கு கிளம்பினர். அப்போது திடீரென பலத்த இடி இடித்தது. இடி ஆனந்தராஜ் மீது தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். ஊத்துக்கோட்டை போலீசார் ஆனந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை