உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவுக்கு ரூ.3,530 கோடி உலக வங்கி ஒப்புதல்

கேரளாவுக்கு ரூ.3,530 கோடி உலக வங்கி ஒப்புதல்

திருவனந்தபுரம்: கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த பிப்ர வரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கியிடம் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபரங்கள் உலக வங்கிக்கு அ னுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உலக வங்கி 3,530 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 70 சதவீதம், அதாவது 2,470 கோடி ரூபாயை உலக வங்கி கடனாக வழங்கும். மீதமுள்ள, 1,060 கோடி ரூபாய் மாநில அரசால் வழங்கப்படும். இந்த திட்டம், கேரளாவின் பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதையும், அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ