உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக செஸ் சாம்பியன்ஷிப்; பட்டத்தை நோக்கி முன்னேறிய குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப்; பட்டத்தை நோக்கி முன்னேறிய குகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் சீன வீரர் லிரெனை இந்திய வீரர் குகேஷ் தோற்கடித்தார். சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற உலகின் நம்பர் 5 வீரரான இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், உலகின் நம்பர் 15 வீரரான சீனாவின் டிங் லிரென் 32, மோதி வருகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். முதல் 10 சுற்று முடிவில், இருவரும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். முதல் மற்றும் 3வது சுற்றுகளை தவிர, பிற சுற்றுகள் சமனில் முடிந்தன. இந்த நிலையில், இருவரிடையே 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய இந்திய வீரர் குகேஷ், ஆரம்ப முதலே சாமர்த்தியமாக காய்களை நகர்த்தினர். இதனால், ஆட்டத்தின் 29வது நகர்த்ததில் குகேஷ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் எஞ்சிய 3 சுற்றுகள் முடிந்தாலும் இந்திய வீரர் குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வது உறுதியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rpalni
டிச 09, 2024 10:57

குகேஷ் திறமை மெச்சப்படும். எந்தவித சப்போர்ட் இல்லாமல் மேன்மேலும் உயர்வது மகிழ்ச்சியளிக்கிறது. வாரிசு அரசியலை வேரறுக்க வந்த அண்ணாமலை போல நீங்கள் புகழ் பெறுவீர்


Bvanandan
டிச 08, 2024 21:05

Congrats Gukesh. Continue at the same momentum Win the Tournament


Ramesh Sargam
டிச 08, 2024 19:58

Wishing Kukesh advance wishes and all the very best.


Kavitha Sivakumar SG
டிச 08, 2024 19:02

congratulations Gukesh !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை