உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் சிறந்த பல்கலை பட்டியல் வெளியீடு; இந்தியா பல்கலைகள் எந்த இடம் தெரியுமா!

உலகின் சிறந்த பல்கலை பட்டியல் வெளியீடு; இந்தியா பல்கலைகள் எந்த இடம் தெரியுமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகில் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.டைம்ஸ் ஹையர் எஜுகேசன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 115 நாடுகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 9வது ஆண்டாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலை முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 2வது இடத்தில் இருந்த ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி., எனப்படும் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல, கடந்த முறை 4ம் இடத்தில் இருந்த ஹார்வார்டு பல்கலைக்கழகம், 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரின்ஸ்டன் பல்கலை 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கண்ணுக்கெட்டிய துாரம் வரை இந்திய பல்கலைகள் எதுவும் இல்லை. இந்தியாவின் பெங்களூரூவில் செயல்பட்டு வரும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 261வது இடத்தில் உள்ளது.

டாப் 10 பல்கலை பட்டியல்

ஆக்ஸ்போர்டு பல்கலைமாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஹார்வார்டு பல்கலைபிரின்ஸ்டன் பல்கலைகேம்ப்ரிட்ஜ் பல்லைஸ்டேன்போர்டு பல்கலைகலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிகலிபோர்னியா பல்கலை, பெர்க்லேஇம்பீரியல் காலேஜ் லண்டன்யேல் பல்கலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

T.Gajendran
அக் 10, 2024 22:11

எப்படி சார், இந்தியாவில், ஐ ஐ டியில், படித்த ஒரு சுந்தர் பிச்சை, அவர்கள், உலகின் தலைசிறந்த நிறுவனத்தில், CEO, கூகேள் இருக்கிறார், இன்னும் தலைசிறந்த மருத்துவர்கள், நம்நாட்டில் உயர் கல்வி பயின்று, பட்ட மேற்படிப்பு, படிக்கசென்று, வேலைபார்கிறார்கள், ஆனால், 115 நாடுகளின், சிறந்த கல்வி பல்கலைக்கழகம், இந்தியாவில், ஒன்றும் இல்லை என்பது, எவ்வளவு, அபத்தம், இது ஒரு ஜோடிக்கபட்ட சர்வே,


சாண்டில்யன்
அக் 10, 2024 20:15

சென்னை IIT போல வராது .


Lion Drsekar
அக் 10, 2024 15:35

இங்குதான் எல்லாமே கற்பனை, காவியம், என்று உண்மை அனைத்தையுமே வேரோடு அழித்து இவர்கள் அதாவது குறுநில மன்னர்கள் குடும்பம் மட்டுமே உலகில் இடம்பெறவேண்டும் என்று எல்லாவற்றையுமே மாட்டிவிட்டார்களே , நாளந்தா பல்கலைக்கழகம் Nalanda University இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் பொ.ஊ. 415-455 நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும்.1197ல் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியின் படைவீரர்களால் நாளந்தா பல்கலைக்கழகம் முற்றாக அழிக்கப்பட்டது. 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள், பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது., , தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களில் ஜாதி, மத மொழி வெறி கர்ப்பிக்கப்பட்டு, பொது சொத்துக்களுக்கு தீவைத்தல் , சாலைமறியல் என்று படிப்பவர்களை திசை திருப்பி தங்களுக்கு குரல்கொடுக்க திறமையான மாணவர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று, அவர்கள் வளர்ந்த பின்பு மாண்புமிகு என்ற அடைமொழி வரும்போது இவர் பள்ளிப்பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடுகொண்டு, எதிராக குரல்கொடுத்து வாழ்ந்தவர் என்று பெருமை பேசும் காலம், போகும் காலங்களில் இரண்டு பட்டம் வாங்கினால் ஒரு பட்டம் இலவசமாக கொடுப்பார்கள், வந்தே மாதரம்


Suppan
அக் 10, 2024 15:02

யார் அதிகமாகப் பணம் கொடுப்போர்களோ அவர்கள் பெயர்களை பட்டியலிட்டுக் கொடுத்தால் எந்த ஆளுநர் ஒப்புக்கொள்வார்? அதனால்தான் பல்கலைக்கழகங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது .


Rpalnivelu
அக் 10, 2024 14:57

இந்த தர வரிசை என்பதே பெண்கள் அழகிப் போட்டியை போல் ஒரு தந்திரம் தான். ஆனால் கட்டு ஆரம்பித்து வைத்த சமசீர் கல்வி ஒரு குப்பை என்பதை திருட்டு த்ரவிஷன்களும் ஒப்புக் கொள்வார்கள். தமிழகத்துக்கு என்று அண்ணாமலை போன்றவர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்களோ அன்றே உண்மையான விடியல்


Karthik Tamilan
அக் 10, 2024 14:19

இந்த தர வரிசையை வைத்து நாக்கு கூட வழிக்க இன் கூட முடியாது... நானும் பல நாடுகளில் வேலை செய்து விட்டேன்..நம் கல்வி முறை கற்ற நம்மிடம் இருக்கும் பல அறிவுகள் யாரிடமும் இல்லை என்பதே நிதர்சனம்..ஆனால் ஒன்று, நம்முடைய infrastructure and equipment போன்ற பிற இதர விதத்தில் சற்று பின்தங்கிய உள்ளோம்.


தத்வமசி
அக் 10, 2024 14:07

இந்த தரப் பட்டியலில் நமது நாட்டு பல்கலைக்கழகங்கள் வராததற்கு பல காரணிகளைச் சொல்லலாம். முதலில் இந்த தரவரிசைப் பட்டியல் என்பது ஒரு மாயை என்று சொல்லலாம். காரணம் உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்களை இழுப்பதற்கான முதல் படி இது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இந்த நிலை இல்லை. மேலும் இவர்களின் பாடம் நடத்தும் முறை, தேர்வு நடத்தும் முறை எல்லாமே இந்திய கல்வியியல் வழியில் கிடையாது. முக்கியமாக இட ஒதுக்கீடு எங்கும் கிடையாது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் தனியார் போட்டி மிக அதிகம். சிறிய கண்டுபிடிப்பும் பெரிதாக மதிக்கப்படும். கல்வியில் அரசியல் கலப்பு கிடையாது. ஜாதி, மதம் என்று எந்த பிரிவும், இட ஒதுக்கீடும் கல்வியில் கிடையாது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


Rengaraj
அக் 10, 2024 13:37

கல்வி தரத்தில் நமது இந்திய பல்கலைக்கழகங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த தரவரிசை நிரூபித்துஇருக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கல்வியை நமது பல்கலைக் கழகங்கள் வலியுறுத்த வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களை இந்த சமுதாயமும் அரசும் மதிக்கவேண்டும். அதற்கு வலிமையான ஆரம்பக்கல்வித்தரத்தை கொண்ட உள்கட்டமைப்பு மிகஅவசியம். ஆரம்ப கல்வியில் இருந்தே கல்வி தரத்தை நாம் மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வாக்குவங்கி அரசியலால் வியாபாரம் ஆகிவிட்ட நமது கல்விமுறையில் கல்வியின் தரம் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோலில் நிலைநிறுத்தப்படுகிறது. எட்டாங்கிளாஸ் வரைக்கும் ஆல் பாஸ் பண்ணச்சொல்லும் நமது அரசு எஜூ கேஷன் ஸிஸ்டத்துக்கு உலக தரம் எதிர்பார்க்கும் ஆரம்பக்கல்வியை கொண்டுவரமுடியாது. விளையாட்டில் எவ்வாறு உலகத்தரம் என்று நாம் செயல்படுகிறோமோ அதேபோன்று கல்வியிலும் இந்தியா முழுவதும் ஒப்புக்கொள்ளும் ஒரு உலகத்தரத்தை கொண்டுவரவேண்டும். அது சாத்தியமாகும்வரை இந்தியாவுக்கென்று ஒரு கல்வி தரத்தை ஏற்படுத்துவதில் கல்வியாளர்களும் பொதுமக்களும் ஏன் பல்வேறு மாநில அரசுகளும் போராட வேண்டியிருக்கும்.


sundaran manogaran
அக் 10, 2024 13:26

துணைவேந்தர்களே இல்லாத தமிழக பல்கலைக்கழகங்கள் உலகில் சிறந்தவையாகத்தான் இருக்கின்றன....இது ஆளுநர் செய்த வேலையாக இருக்கும்


Barakat Ali
அக் 10, 2024 13:23

இந்தியாவின் பெங்களூரூவில் செயல்பட்டு வரும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 261வது இடத்தில் உள்ளது. இதுவே இப்படின்னா ஐ ஐ டி க்கள் பத்தி கேட்கவே வேணாம் ..... எங்க துக்ளக்காரை பிரதமர் ஆக்கினாத்தான் மாற்றம் வரும் .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை