உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!

உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. மேலும், கோப்பையை வென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, கோப்பையை பிரதமரிடம் கொடுத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் பயிற்சியாளர் அமோல் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராம் சென்னை
நவ 05, 2025 21:56

ஜோக் அடிச்சுட்டாரு எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள


RAMESH KUMAR R V
நவ 05, 2025 21:08

வருங்காலங்களிலும் வெற்றி நமதே . வளர்க பாரதம்.


திகழ்ஓவியன்
நவ 05, 2025 20:54

தலை நல்ல காலம் பைனல் க்கு ஸ்டேடியம் போகவில்லை , போயி இருந்தா இந்நேரம் CUP SA ப்ரெசிடெண்ட் கிட்ட அவர்கள் காட்டி இருப்பார்கள்


Vasan
நவ 05, 2025 21:13

தல அஜித் சென்றாரா என்ன ?


vivek
நவ 05, 2025 21:14

இருநூறு கொத்தடிமையின் பிறப்பு தெரியுது


திகழ்ஓவியன்
நவ 05, 2025 22:08

ஆண்கள் அணி இப்படி தான் கட்டாயம் ஜெயிக்கும் என்ற நிலையில் இவர் சென்று சொதப்பி விட்டது ஆகவே நாங்கள் வேண்டி கொண்டோம் தல பெண்கள் கிரிக்கெட் போக கூடாது , பீஹார் தேர்தல் கிரிக்கெட் ஐ காப்பாற்றி விட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை