உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் எக்ஸ் நிறுவனம் வழக்கு

மத்திய அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் எக்ஸ் நிறுவனம் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.எக்ஸ் நிறுவனம் தனது மனுவில், ஐ.டி., சட்டத்தில் குறிப்பாக பிரிவு 79(3)(பி) ஆகிய பிரிவை மத்திய அரசு பயன்படு்த்துகிறது. இது, ஆன்லைனில் தடையற்ற கருத்து பரிமாற்றத்தை தடை செய்வதுடன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. சட்டப்பிரிவு 69ஏ விதிமுறைகளை மீறி, இணையதள உள்ளடக்கத்தை தடுக்க ஐ.டி., சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.ஐ.டி., சட்டம் 69 ஏ பிரிவின் படி, தேச பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை நீக்க உத்தரவிட அரசுக்கு அனுமதி வழங்குகிறது. 79(3)(b) சட்டப்பிரிவானது, எந்த உள்ளடக்கம் சட்டவிரோதமானது என்பதை சமூக வலைதளங்களே முடிவு செய்ய அனுமதி வழங்குகிறது. இதனால் சட்டரீதியிலான பிரச்னைகள் அல்லது பின்டைவை சந்திக்க நேரிடுவதாக சமூக வலைதள நிறுவனங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
மார் 20, 2025 19:47

தடையற்ற கருத்து பரிமாற்றம் சரிவராது. பாக்கிஸ்தான் தீவிர வாத கருத்தை நியாய படுத்தும். சீனா கம்யூனிஸ்ட் கருத்து . இந்தியா அமெரிக்கா ஜனநாயக கருத்து . ஒரு இலக்கை ஜனநாயகம் மூலம் சீர் திருத்தி அடைவது சிறந்த கருத்து . நிறுவனம் வழக்கு தொடுப்பது ஜனநாயக முறை. கருத்துக்கு பொருள் / விளக்கம் கூற வேண்டும். ஜனநாயகம் வலுப்படுத்த வன்முறை தேவை என்ற குருட்டு கருத்துக்கு இந்தியா செவி சாய்க்காது . நீங்கள் மெட்ராஸ் அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமான பெரிய தீர்ப்பு பெற முடியும். இங்கு தான் அரசியல் சாசனத்தை முழுதும் அறிந்த வக்கீல் இருப்பர் .


naranam
மார் 20, 2025 19:07

இவன் யார் நம் நாட்டு சட்டத்தைக் குறை சொல்ல? ஜார்ஜ் சொரோசின் கைக்கூலியோ! அமெரிக்கா அதிபரின் நண்பர் என்றால் எல்லாச் சலுகையும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கிறார். எக்ஸ் தளத்தில் அமெரிக்கா அதிபருக்கு எதிரான கருத்துக்களை இவர் தணிக்கை செய்யவில்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை