மேலும் செய்திகள்
என்னை கொல்ல முயற்சி லாலு மகன் கதறல்
3 minutes ago
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் துறையை வலுப்படுத்தும் நோக்கில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், 'யக்ஷ்' என்ற செயலியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அறிமுகப்படுத்தினார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில தலைநகர் லக்னோவில் மூத்த போலீஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று துவக்கி வைத்தார். இணைய குற்றங்கள், மனித கடத்தல் போன்ற பிரச்னைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. இது தவிர, உ.பி., போலீஸ் துறையை தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன அமைப்பாக உருவாக்குவது உட்பட எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் குழு ஆராய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் இயங்கும் 'யக்ஷ்' செயலியை அறிமுகப்படுத்தினார். இச்செயலி, குற்றங்கள், குற்றவாளிகள் மற்றும் முக்கிய பகுதிகள் குறித்து விரிவான தரவுகளைப் பராமரிக்கும் எனவும், இது போலீஸ் துறையின் 'பீட்' புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பு எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது தவிர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் சந்தேக நபர்களையும் அடையாளம் காணுதல், குரல் தேடல் போன்ற பணிகளை இச்செயலி எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 minutes ago