உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்

சட்டவிரோத நிலம் ஒதுக்கீடு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜர்

பெங்களூரு: சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கிய வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, லோக் ஆயுக்தா முன் விசாரணைக்கு ஆஜரானார்.கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. இவர் முதல்வராக இருந்தபோது, பெங்களூரு கங்கேனஹள்ளியில் 1.11 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்துகிறது.விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. நேற்று நடந்த விசாரணையில், விதான் சவுதா அருகே உள்ள, லோக் ஆயுக்தா அலுவலகத்தில் எடியூரப்பா ஆஜரானார்.ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில், அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். பின், அவர் புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை