உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி யமுனையில் குளிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு யோகி ஆதித்யநாத் சவால்

டில்லி யமுனையில் குளிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு யோகி ஆதித்யநாத் சவால்

கிராரி : டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.கிராரி பகுதியில் தன் முதல் பேரணியில் ஆதித்யநாத் ஆற்றிய உரை: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனையை அழுக்கு வடிகாலாக மாற்றிய பாவத்தை செய்தார்.நேற்று முன்தினம், நானும் என் அனைத்து அமைச்சர்களும் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாகராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடினோம். டில்லியில் உள்ள யமுனையில் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து குளிக்க முடியுமா என்று கெஜ்ரிவாலிடம் கேட்க விரும்புகிறேன்.அவருக்கு ஏதாவது தார்மீக தைரியம் இருந்தால் அவர் பதிலளிக்க வேண்டும். சாலைகளின் மோசமான நிலை, சுகாதாரமின்மை, குடிநீர் - கழிவுநீர் பெருக்கெடுப்பு பிரச்னைகளை உருவாக்கி டில்லியை ஆம் ஆத்மி சீரழித்தது.உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா - காஜியாபாத் சாலைகள், டில்லியை விட மிகச் சிறந்தவை. நுகர்வோரிடமிருந்து மூன்று மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை ஆம் ஆத்மி அரசு வசூலிக்கிறது. ஆனால் அவர்களால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

J.Isaac
ஜன 24, 2025 11:29

குளிக்காதவர்கள் தான் குளிப்பதற்கு சவால் விடுவார்கள்.


vijai
ஜன 24, 2025 17:26

loose talk


கிஜன்
ஜன 24, 2025 10:45

டெய்லி குளிப்பபவர்கள் ஆரவாரம் இல்லாமல் குளிப்பார்கள் ..... அதிசயமாக குளிப்பபவர்கள் .... ஸீ ஐ ஆம் டேக்கிங் பாத் ....என்று சவுண்ட் விடுவார்கள் ....


Sambath
ஜன 24, 2025 09:59

ஆம். கூவம் அடையாறு நதிகளை சுத்தப் படுத்துவாதாக கூறி பல்லாயிரம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்ட திராவிஷ கட்சித் தலைவர்களையும் இதே போல் கூவம் அடையாறு ஆறுகளில் குளிக்கச் செய்ய வேண்டும். சவால் விடுங்கள்


Barakat Ali
ஜன 24, 2025 08:12

கெஜ்ரி ஊழல் பணத்துல மட்டும்தான் குளிப்பாரு .....


அப்பாவி
ஜன 24, 2025 07:25

இந்த உருட்டலெல்காம் எதுக்கு? போய் மணிகர்ணிகா காட் டில் குளிச்சு காமிங்க பாப்பம்.


Kasimani Baskaran
ஜன 24, 2025 06:36

நல்ல கேள்வி.


T.sthivinayagam
ஜன 24, 2025 06:19

தேவையற்ற அலப்பறை


kulandai kannan
ஜன 24, 2025 07:15

மக்களின் அடிப்படை தேவை பாதுகாப்பான நீர். அந்த வகையிலேயே இந்த சவால். குவார்ட்டர், பிரியாணி கூட்டத்திற்கு இதெல்லாம் முக்கியமில்லை.


vivek
ஜன 24, 2025 07:31

தினமும் குளிபவர்களுகு மட்டுமே பொருந்தும் (என்று மக்கள் கூறுகின்றனர்)


Kasimani Baskaran
ஜன 24, 2025 08:54

நாங்க கூவத்தில் கூட குளிப்போம்... ஏன்னா நாங்க திராவிடாள்ஸ் .. அதுதான் தெரியும்.


Raj
ஜன 24, 2025 06:08

என்ன ஒரு சவால்.