உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு

மஹா கும்பமேளா மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்: யோகி ஆதித்யநாத் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு ரூ.5,000 கோடி செலவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முதல்வர் யோகி ஆதியநாத், இந்த மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவின் மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று பதில் கொடுத்துள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், இந்தாண்டு மஹா கும்பமேளா வரும் ஜன., 13ம் தேதி முதல் பிப்.,26ம் தேதியுடன் (மஹாசிவராத்திரி) முடிவடைகிறது. மிகப்பெரிய ஆன்மிக கலாசார விழாவான இந்த மஹா கும்பமேளா, தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு தீவிரமாக செய்துள்ளது. சுமார், ரூ.5,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்ததாவது: இது மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா. இந்த கும்ப மேளாவின் மூலம் மாநிலம் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சி பெறும். அதேவேளையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டு ஓராண்டாகி விட்டது. உத்தரபிரதேசம் மாநிலம் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்வது குறித்து உயர் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கும்ப மேளாவுக்கு ரூ. 5,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் வருமையால் அரசுக்கு, செலவிடப்பட்டதை விட கூடுதல் வருவாய் கிடைக்கும். 2017ம் ஆண்டுக்கு முன்பாக வாரணாசிக்கு 50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். ஆனால், 2024ல் 16 கோடி பேராக அதிகரித்துள்ளது. அதேபோல, 2016ல் பிற மாநிலங்களைச் சேர்ந்த 2.83 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 1,200 வெளிநாட்டு பயணிகளும் அயோத்திக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால், 2024ம் ஆண்டின் ஜன., முதல் செப்., மாதம் வரையில் சுமார் 13.55 கோடி பேர் அயோத்திக்கு வந்துள்ளனர். அரசுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், ஓட்டல்கள் உணவகங்கள் என அனைத்திற்கும் ஒரு நபருக்கு ரூ.5,000 என்று கணக்கிட்டால் கூட, வாரணாசியில் மட்டும் ரூ.80,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அயோத்தி, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. மாறாக, சாதி, மதம், மொழியின் அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தி பார்க்கவே அவர்கள் விரும்புகிறார்கள், எனக் குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

முருகன்
ஜன 09, 2025 15:25

அடித்து விட வேண்டியது தான் யார் கேள்வி கேட்க போவது


veera
ஜன 09, 2025 17:22

ஆமாம் இங்கே ரூபாய் 113 பொங்கல் பரிசை தூக்க முடியாமல் தூக்கி சென்றோம்


A1Suresh
ஜன 09, 2025 15:05

கழக மாநாட்டில் கட்டாயம் நடக்கும்


Ramesh Sargam
ஜன 09, 2025 14:08

அந்த ரூ.2 லட்சம் கோடி வருவாய் மூலம் வளர்ச்சி அடையாத மதுரா, அயோத்தி, வாரணாசி மற்றும் பல மக்கள் அதிகம் கூடும் இடங்களை மேலும் நன்றாக மேம்படுத்தலாம். புண்ணிய நதியாம் கங்கையை மேலும் சிறப்பாக தூய்மையாக மாற்றலாம். கங்கையில் ஆரத்தி எடுத்து வழிபட்டால் மட்டும் போதாது. கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு, தூய்மை படுத்தப்படவேண்டும்.


தமிழன்
ஜன 09, 2025 12:56

ஆமாம். நிறைய முன் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். தற்காலிக கழிப்பறை, குளியல் கட்டம் உடை மாற்றும் இடம் என நிறைய மாற்றங்கள் வந்துள்ளது.. சமீபத்தில் நேரில் பார்த்த பிறகு இதை பதிவு செய்கிறேன். அடுத்த முறை அலகாபாத் வந்தால், இது பழைய அலகாபாத் இல்லை என சொல்லும் அளவிற்கு மாற்றங்கள் பிரமிக்க வைக்கிறது ..


J.Isaac
ஜன 09, 2025 11:28

திருப்பதி சம்பவம் நடக்க போகிறது.


Laddoo
ஜன 09, 2025 11:38

எங்க வாடிகன்லயா?


Mettai* Tamil
ஜன 09, 2025 13:58

உன்னோட புத்தி இப்படித்தான் போகும் .


J.Isaac
ஜன 09, 2025 17:43

ஒழுக்கமா பெயரை எழுத தைரியமில்லாத Laddoo கருத்து ஒரு கேடா ?


PARTHA
ஜன 09, 2025 10:49

யோகி அடுத்த பிரதமர் ஆகட்டும்.


seshadri
ஜன 09, 2025 10:34

இந்த சோழ நாடன் என்று ஒரு இருநூறு ரூபாய் உடன் பிறப்பு எழுதி இருப்பதை பார்த்தால் இதற்கு மேல் சிந்திக்க தெரியாது இந்த திராவிட மாடல்க்கு. வருவாய் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்கும் என்றால் அதற்கேற்ற உழைப்பு வேண்டும். அங்கு எல்லோரும் உழைத்து வருவாய் ஈட்ட வேண்டும் என்பதுதான் இதன் மூலம் தெரியப்படுத்துவது இங்கு மாதிரி ஓசியில் வரும் என்று அர்த்தம் அல்ல. என்ன செய்ய இங்கு இருக்கும் விடியா அரசு அந்த மாதிரி செய்து வைத்திருக்கிறது.


sundarsvpr
ஜன 09, 2025 10:27

ஆன்மிக பணிக்கு செலவு செய்தால் கணக்கு வேண்டாம். காரணம் உலகத்திற்கு சொந்தக்காரன் ஆண்டவன். நம்முடைய சுக துக்கங்களுக்கு செலவு செய்தால் கணக்கு காட்டவேண்டும். காரணம் பணம் நமது அல்ல.


சோழநாடன்
ஜன 09, 2025 09:52

கும்பமேளா நடத்தினால் ரூ.2 இலட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றால் இந்தியாவில் உள்ள எல்லா ஆற்றங்கரைகளிலும் கும்பமேளாவை நடத்தலாம். இந்தியாவில் தொழில்சாலைகள் கட்டுவதற்குப் பதிலாக திருப்பதி கோயிலின் இணைப்பு கோயில்களை மாநிலங்கள் முழுவதும் அமைக்கலாமே. நல்ல வருமானம் கிடைக்கும்தானே? ஒன்றிய பாஜக அரசு இப்படிப்பட்ட தெய்வீக காரியங்களைச் செய்து மக்களை முழுசோம்பேறிகாக ஆக்கினால் நாட்டுக்கும் நல்லது. பாஜகவுக்கும் நல்லதுதானே?


Mettai* Tamil
ஜன 09, 2025 11:32

தெய்வீக காரியங்களைச் செய்தால் மக்கள் முழுசோம்பேறிகலாக ஆகமாட்டார்கள்.. ஓட்டுக்கு ஊழல் பணம், டாஸ்மாக், போதை பொருள், கள்ளச்சாராயம், ஊழல், இலவசம் என இதனால்தான் மக்கள் முழுசோம்பேறிகலாக ஆகிவிட்டார்கள்.. இதுக்கு அடிமையாகிவிட்டதால் உங்களுக்கு தெய்வீக காரியம் இளக்காரமாக தெரியுது. அப்படியே நம்ம இந்து அறநிலைத்துறையை கோயிலை விட்டு வெளியேறச் சொல்லுங்க ...இந்துக்கள் கோயில் பணம் மட்டும் அரசுக்கு வேண்டாம் என சொல்லுங்கள் ...


Mohan D
ஜன 09, 2025 11:54

உ பிஸ் உங்களுக்கு இந்த அருமை தெரிய வாய்ப்பில்லை ...இது என்னமோ இன்னிக்கி நடக்குறமாதிரி திரிக்க கூடாது ...காலம் காலமா நடக்குது இன்னும் சிறப்ப மக்களுக்கு வசதிகள் செஞ்சு குடுத்து அதுல வருமானம் பாக்குறாங்க உங்கள மாதிரி கோவில்ல கொள்ளை அடிக்கல , மணல் ஹிருதய, டாஸ்மாக் ல குடிக்க வெச்சு லாபம் பாக்கல .


Laddoo
ஜன 09, 2025 09:09

நாங்க எந்த கஷ்டமும் படாம 2 லட்சம் கோடியே அப்பவே அடிச்சுட்டோமே-கனிமொலி மைண்ட் வாய்ஸ்


Biden
ஜன 09, 2025 09:51

............


முக்கிய வீடியோ