உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது

ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது

பெங்களூரு : வழக்கு விசாரணையை விரைவில் எடுத்துக் கொள்ளும்படி கூறி வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவுக்கு, 'பசுவின் மடியில் ரத்தம் வரும் வரை பால் கறக்க முடியாது' என, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகரபிரசன்னா ஆதங்கப்பட்டார்.கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும் நீதிபதி என்று பெயர் பெற்றவர்.நேற்று முன்தினம் இவர் முன் ஆஜரான வழக்கறிஞர், சமர்ப்பித்த மனுவில், 'தனது வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும்படி, பல முறை விண்ணப்பித்துள்ளேன். விசாரணை இன்னும் துவங்கவில்லை. இம்முறை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.இதை பார்த்த நீதிபதி நாகபிரசன்னா, 'கடந்த 29 நாட்களில், 7,500 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 5,500 மனுக்களை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளேன். எந்த வழக்குகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். பசுவின் மடியில் இருந்து ரத்தம் வரும் வரை பால் கறக்க முடியாது' என ஆதங்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை