உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ஆண் நண்பருடன் விரும்பி தானே சென்றீர்கள்: பலாத்கார வழக்கில் நீதிபதி கேள்வியால் சர்ச்சை

‛ஆண் நண்பருடன் விரும்பி தானே சென்றீர்கள்: பலாத்கார வழக்கில் நீதிபதி கேள்வியால் சர்ச்சை

அலகாபாத் : 'அதீத மது போதையில் ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்று, பிரச்னையை தானே வரவேற்றுள்ளார்' என, பாதிக்கப்பட்ட பெண் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.'இது பலாத்காரம் அல்ல; பரஸ்பர சம்மதத்துடன் நடந்த உடலுறவு என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது' என நீதிபதி கூறியுள்ளார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றில், உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சமீபத்தில் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கண்டனம்

'சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை துண்டிப்பது பலாத்காரமாகவோ, பலாத்கார முயற்சியாகவோ கருத முடியாது' என நீதிபதி கூறியிருந்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்தக் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பலாத்கார புகார் கூறியுள்ள பெண், டில்லியில் எம்.ஏ., படித்து வந்தார். கடந்தாண்டு செப்., 21ல், தன் நண்பர்களுடன் இணைந்து மதுபானம் குடித்துள்ளார்; அதிகாலையை தாண்டியும் குடித்துள்ளனர். அதீத போதையில் இருந்ததால், அந்தப் பெண், தன் ஆண் நண்பர் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.

ஆதாரங்கள்

ஆனால், ஆண் நண்பர், தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், வேறொரு உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களில் இது நிரூபிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ள வாக்குமூலம் மற்றும் வழக்கின் தன்மையை ஆராயும்போது, இது பலாத்காரமாக தெரியவில்லை. பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த உடலுறவாகவே தெரிகிறது.முதுநிலை பட்டப் படிப்பு படிக்கும் பெண் என்பதால், எது சரி, எது தவறு என்பதை நிச்சயம் இந்தப் பெண் உணர்ந்திருப்பார். அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், பிரச்னையை அவரே வரவேற்றுள்ளார். அதனால், அதற்கு அவர் தான் பொறுப்பாளி. இதை பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியுள்ளார். இதை பலாத்காரமாக கருத முடியாது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

visu
ஏப் 11, 2025 14:52

அவர் கேட்டதில் என்ன தப்பு தெரியவில்லை


Tetra
ஏப் 11, 2025 11:08

ஏதோ ஃப்ரிட்ஜ் லிருந்து தப்பித்தாரே. இந்த கேஸையே ரத்து செய்திருக்க வேண்டும்.


sankaranarayanan
ஏப் 11, 2025 10:04

இந்த நீதிபதியின் நடவடிக்கை உலகில் உள்ள எல்லா பேர்களுக்கும் ஒரு விழிப்பு உணர்வை தூண்டிவிட்டிருக்கிறது குடியுங்கள் அளவோடு குடியுங்கள் மிகவும் தெரிந்த நண்பர்களோடு வெளியே செல்லுங்கள் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் நபர்களை அறவே விட்டு ஒழியுங்கள் கதை நடந்தபின் கந்தலானபின் கவலைப்படுவதில் நியாயமே இல்லை உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும் அரசோ அல்லது நீதி மன்றமோ இல்லை


Thetamilan
ஏப் 11, 2025 09:50

ஒரே மாதத்தில் ஏற்கனவே ஒரு நீதிபதி வீட்டில் கட்டுக்கடங்காத பணம். இன்னொரு நீதிபதி பாலிய குண்டர்களுக்கு துணை.


PSGTECHHOSTEL
ஏப் 11, 2025 11:04

கட்டு காட்டாக அந்த பணம் அவருடைய பணம் இல்லையே.


Tiruchanur
ஏப் 11, 2025 09:32

மனிதாபிமான அடிப்படையில் அந்த நீதிபதி கேட்ட கேள்வி தவறானாலும், நடைமுறைக்கு சரியான கேள்வி. குடிப்பதே தப்பு. அதிலும் விடிய விடிய குடிப்பது மிக தப்பு. அதற்கு பின்னால் ஒழுங்காக தன் வீடு போய் சேர்ந்திருக்க வேண்டும். பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்தால் பற்றத்தான் செய்யும்


Sampath Kumar
ஏப் 11, 2025 08:54

சரியான கேள்வி பாராட்டுக்கள்


V Venkatachalam
ஏப் 11, 2025 08:49

ஆணாதிக்கத்தை ஒழிக்கணும்னா பெண்களை தண்டிக்க கூடாது. ஆண்களைதான் தண்டிக்கணும்.. அப்பதான் எங்கள் தந்தை சொன்ன சமுதாயம் வளரும்..


KRISHNAN R
ஏப் 11, 2025 08:41

தன்னிலை மறந்து சென்று...தனி நபர் பொறுப்பிற்கு... அரசு நீதி மன்றம் வேலை செய்ய வேண்டும் என்ற நிலை......


Barakat Ali
ஏப் 11, 2025 08:21

நீதிபதியின் கேள்வியில் தவறில்லை ....


அப்பாவி
ஏப் 11, 2025 07:57

தண்ணியடிச்சிட்டு இவள் போனதும் தப்பு. தண்ணியடிச்சுட்டு அவன் செஞ்சதும் தப்பு. தானிக்கி தீனிக்கி சரிப்போயிந்தி. இனிமே தண்ணியடிக்கணும்னா வீட்டில் உக்காந்து தனியா பாதுகாப்பா அடிங்க. அடிச்சது என்ன பீரா? விஸ்கியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை