உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 வயது சிறுமி பலாத்காரம் இளைஞர் சுட்டுப்பிடிப்பு

7 வயது சிறுமி பலாத்காரம் இளைஞர் சுட்டுப்பிடிப்பு

முசாபர்நகர்:உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 35 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டார்.முசாபர் நகர், புதானா நகரில் வசிக்கும் ராஜு, 35, தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 7 வயது சிறுமியை, நேற்று முன்தினம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி வீடு திரும்பியவுடன், பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தைக் கூறினாள்.பெற்றோர் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று காலை, ராஜுவை சுற்று வளைத்தனர். தப்பி ஓடிய ராஜு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. கைது செய்யப்பட்ட ராஜு, புதானா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை