உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4.85 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

4.85 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

பாலக்காடு : பாலக்காட்டில், 4.85 கிலோ கஞ்சாவுடன் பீஹாரை சேர்ந்தவரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கேசவதாஸ் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர், இன்ஸ்பெக்டர் ரினேஷ் தலைமையில் மாவட்ட கலால் துறையினரும் ஒருங்கிணைந்து நேற்று சோதனை நடத்தினர்.அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் இருந்த ஒரு நபரிடம் நடத்திய சோதனையில், 4.85 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடித்தனர். இவர் பீஹார் மாநிலம் பன்மான்கி மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் 24, என்பதும், பீஹாரில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை செங்கன்னூர் என்ற பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது. அவரை பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி