உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்கள் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்: கார்கே

இளைஞர்கள் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்: கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: '' இளைஞர்கள் எழுச்சி பெற்று அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.ஒடிசாவில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: அரசியலமைப்பில் இருந்து மதசார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய வார்த்தைகளை நீக்க பா.ஜ., விரும்புவதாக கேள்விப்பட்டேன். அரசியலமைப்புக்கு கட்டுப்படுவோம் என்று, அவர்களின் கட்சி விதிகளில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அதனை அக்கட்சி பின்பற்றுமாhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2aa2o00c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏழைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் பேசி வருகின்றன. எனவே, இளைஞர்கள் விழித்தெழுந்து அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். இல்லையென்றால் பா.ஜ., சமூகத்தை பிளவுபடுத்திவிடும்.மஹாராஷ்டிராவில் திருட்டு அரசாங்கம் அமைந்துள்ளது. 85 லட்சம் வாக்காளர்களை மாற்றிவிட்டு, இங்கு பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல், பீஹாரிலும் 7 கோடி வாக்காளர்களில் 2 கோடி பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்தகைய நபர்களும், அரசும் வேண்டுமா?இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்தை பாதுகாக்குமா. துரோகிகளை விரட்டியடித்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பா.ஜ.,வினர் பெரிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால், ஒடிசாவிற்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு. அவர்கள் எந்த பணியை செய்யாமலும் விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

JaiRam
ஆக 03, 2025 22:52

ராகுல் இப்பொழுது ஆவிகள் உலகத் தொடர்பில் உள்ளார்


தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 23:59

இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வண்ணம் கார்கே பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.


Raghavan
ஜூலை 11, 2025 22:00

ராகுல் ஒருவரே போதும் அரசியல் அமைப்பை சின்னாபின்னமாக்க


Ramesh Sargam
ஜூலை 11, 2025 21:15

ஆம் கார்கே போன்ற முதியவர்களிடமிருந்து, இன்றைய இளைஞர்கள் அரசியலமைப்பை, இந்திய நாட்டை பாதுகாக்கவேண்டும்.


GMM
ஜூலை 11, 2025 19:45

அரசியல் சாசனம் எழுதியவர்கள் நோக்கம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது முதல் நோக்கம். அன்னியர் ஆதிக்கம், சுதந்திர போராட்ட கடுமை, காங்கிரஸ் உருவாக்கிய மத பிரிவினை கொடுமையை உணர்ந்தவர்கள். மதசார்பின்மை மற்றும் சமூக நீதி பற்றி காங்கிரஸ் பொருள் கூற முடியாது.


சின்னப்பா
ஜூலை 11, 2025 19:41

இவரைப் போன்ற காங் பெருசுகள், வீட்டமைப்பைக் காப்பாற்றிக்கொள்வார்கள்…..


பேசும் தமிழன்
ஜூலை 11, 2025 19:38

இதை சொல்வதற்க்கும் ஒரு பெரிய மனசு வேணும்..... எமெர்ஜென்சி கொண்டு வந்த கான்கிராஸ் கட்சி உங்களிடமிருந்து தான் அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும்.


R.MURALIKRISHNAN
ஜூலை 11, 2025 19:11

இப்பதாம்பா சரியான பாதையில் செல்கிறது. எங்களுக்கு ஊழல் காங்கிரஸ் வேண்டாம் போப்பா....


Varadarajan Nagarajan
ஜூலை 11, 2025 18:44

சிவகாசி டைரியை கையில் வைத்துக்கொண்டு அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என பார்லிமென்டில் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கின்றுக்கும் காங்கிரஸ் கட்சிதான் அரசியலமைப்பு சட்டத்தில் அதிக திருத்தங்களை செய்து அதுவரை இல்லாத புதுவார்த்தைகளை சேர்த்து அதை குட்டிச்சுவராக்கியது. உண்மையில் அதிலிருந்துதான் அரசியலமைப்பு சிதைக்கப்பட்டது. இவர் கூறுவதுபோல் அதிலிருந்து மீட்டு அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும்


கான் க்ரூஸ் ஒப்புக்கு சப்பாணி
ஜூலை 11, 2025 18:32

குல்லா போட்டுட்டு கஞ்சி குடிப்பது, சிலிண்டர் வெடிப்பு, உலகம் பூராவும் வக்ஃபு வாரிய இடம் அப்டி என்ற மதசார்பின்மையை ஒழித்து கட்ட வேண்டும். குல்லா போட்டுட்டு கஞ்சி குடித்தால் அது மதசார்பின்மை, அம்மன் கோவில் ஆடி வெள்ளி கஞ்சி குடித்தால் அது சனாதன், மத சார்பு. என்னடா இது? கூடிய விரைவில் இந்த போலிகள் அடியோடு ஒழிக்க படும்


புதிய வீடியோ