உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியின் பாரத் மண்டபத்தில் நடக்கும் வளர்ந்த இந்தியாவின் இளைய தலைவர்கள் மாநாடு நடந்தது. இதனை துவக்கி வைத்து, அங்கு நடந்தகண்காட்சி, கலாசார நிகழ்வுகள், உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டு இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.பிறகு அவர் பேசியதாவது: இன்று உலக நாடுகள் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்ந்து போற்றி வருகின்றன. நாட்டின் இளைஞர்கள் மீது அவர் பெரிய நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் எப்போதும், இளைய தலைமுறை, புதிய தலைமுறை மீது நம்பிக்கை உள்ளது எனக்கூறுவார். எனது ஊழியர்கள் இளைய தலைமுறையில் இருந்து வந்தவர்கள் என்பார். அவரைப்போல் நானும், உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். விவேகானந்தர் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். அனைத்தும் மீதும் நம்பிக்கை வைத்து இருப்பேன் என்றார். இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன செய்தாரோ, என்ன நனைத்தாரோ அதன் மீது எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது.அனைத்து பிரச்னைகளுக்கும் இளம் தலைமுறையினர் தீர்வு காண்பார்கள் என விவேகானந்தர் கூறினார். அதில் முற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது.இந்தியாவை வளர்ந்த நாடாக இளைஞர் சக்தி மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தகவல்களை மட்டும் கணக்கிடும் நபர்கள், அது சாத்தியம் இல்லை என நினைக்கலாம். ஆனால் நோக்கம் என்பது பெரியது. ஆனால், அது முடியாதது அல்ல.இந்தியா முன்னேறி செல்ல, பெரிய இலக்குகள் நிர்ணயிக்க வேண்டும். இன்று அதனை இந்தியா செய்து கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
ஜன 13, 2025 14:16

இளைஞர்கள் தனி குடும்ப வாழ்க்கையை "adjustment" இல்லாமல் அழித்துக்கொண்டு நாட்டுக்காக பணமாக்கி மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். No happy marriage No kids No food only cash/economy


Oviya Vijay
ஜன 13, 2025 00:28

பக்கோடா வியாபாரம் செய்தா?


veera
ஜன 13, 2025 06:59

இல்லை டாஸ்மாக்கை ஊத்தி கொடுத்தும் செய்யலாம் ஓவியர்


தாமரை மலர்கிறது
ஜன 12, 2025 23:22

இந்தியா வளர்ந்த நாடாகிவிட்டதன் அறிகுறிகள் தென்படத்தொடங்கி விட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் முன் ரெண்டு கார்கள் நிற்கின்றன. இளைஞர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியதுடன் கோடிகளில் கூட சிலர் பெறுகிறார்கள். திறமையான கொத்தனார், பிளம்பர், எலெக்ட்ரிசின் சென்னையில் கிட்டத்தட்ட லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறார். பிற ஊர்களில் ஐம்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. காங்கிரஸ் காலத்தில் சைக்கிள் கூட வாங்கமுடியாமல் தவித்த இந்தியர்கள் இன்று பாட்டோடபாக வாழ்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல இளைஞர்கள் இந்தியாவை நோக்கி திரும்ப வருகிறார்கள். இன்னும் பத்தாண்டில் அமெரிக்கர்கள் இந்தியாவின் ஹெச் ஒன் பி விசாவிற்காக கியூவில் நிற்கவேண்டி இருக்கும்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 12, 2025 18:25

எங்க மெத்து ஸ்பெஷலிஸ்ட் அண்ணாச்சி ஜாப்பரு சாதிக்கை சொல்றீங்களோ ?


அப்பாவி
ஜன 12, 2025 16:09

இளைஞர்கள் எப்போ வந்து, எப்போ நாட்டை மாத்தி...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை