உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் அமைச்சரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்: உத்தரபிரதேசத்தில் சம்பவம் வைரல்

முன்னாள் அமைச்சரின் கன்னத்தில் அறைந்த இளைஞர்: உத்தரபிரதேசத்தில் சம்பவம் வைரல்

ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்ச சுவாமி பிரசாத் மவுரியாவின் கன்னத்தில் இளைஞர் அறைந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலானது.சுவாமி பிரசாத் மவுரியா, பா.ஜ., அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், பின்னர் சமாஜ்வாதி கட்சியின் தலைவராகவும் இருந்தார்.தற்போது ராஷ்டிரிய சோஷித் சமாஜ் கட்சி தலைவராக உள்ளார். மவுரியா இன்று உத்தரபிரதேச மாநிலம் பதேபூருக்கு செல்லும் வழியில் ரேபரேலியில் உள்ளூர் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அப்போது மவுரியாவை அனைவரும் வரவேற்று மாலைகள் அணிவித்தனர். அந்த சமயத்தில் பின்னால் இருந்த ஒரு இளைஞர், சுவாமி பிரசாத் மவுரியாவின் கன்னத்தில் அறைந்தார். சுதாரித்துக்கொண்ட மவுரியா, அந்நிகழ்ச்சியில் தொடர்ந்தார். பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் இளைஞரை பிடித்தனர். இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலானது.சுவாமி பிரசாத் மவுரியா கூறுகையில், கர்ணி சேனா உறுப்பினர்கள் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும் இந்த சம்பவம் போலீசார் முன்னிலையில் நடந்தது என்றார்.போலீஸ் அதிகாரி அமித் சிங் கூறியதாவது:சுவாமி பிரசாத் மவுரியா பதேபூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரை வரவேற்றனர். அப்போது அவரது ஆதரவாளர்களுடன் மாலைகளுடன் இரண்டு பேரும் இருந்தனர். இந்த இரண்டு பேரும் மவுரியாவை தாக்க முயன்றனர். பின்னர் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அமித் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !